இன்றைய ராசிபலன் – 03 பிப்ரவரி 2024

Rasi-palan-new3
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கண்கள் அடுத்தவர்கள் பக்கம் மட்டும்தான் இருக்கும். பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்கின்றான், நம்முடைய அண்ணன் என்ன செய்கின்றான், தம்பி என்ன செய்கின்றான், என்ற நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு இன்று உங்களுடைய வேலையை பார்க்க கவனமே வராது. ஆனால் இது ரொம்ப தவறு. அடுத்தவர்களை பார்த்து நம்முடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது. நமக்கு என்ன தேவையோ அதை பார்த்து செய்து கொள்ளுங்கள். உங்களுடைய ஸ்டைலை ஃபாலோ பண்ண நிச்சயம் உங்களுக்கு சக்சஸ் தான்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் குறைய கூடிய நாளாக இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் எல்லாம் சுலபமாக முடிந்துவிடும். நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை தலைவலியை கொடுத்துக் கொண்டே இருக்கிறது, என்று இருக்கும் வேலையை இன்று கையில் எடுங்கள். அது சுலபமாக முடிந்துவிடும். உங்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாள் அவ்வளவுதான்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக ஆர்வம் காட்டுவீர்கள். புதுசாக ஏதாவது வேலையை தொடங்குவதாக இருந்தால் இன்று தொடங்கலாம். உதாரணத்திற்கு புதுசாக கோர்ஸ் படிப்பது, புதுசாக வேலைக்கு அப்ளை செய்வது, புதுசாக தொழில் தொடங்குவது, இப்படி எதுவாக இருந்தாலும் இன்று முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கொஞ்சம் கிடைக்கும். அதை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பாருங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு டென்ஷன் அதிகமாக இருக்கும். அதனால் காலையிலேயே சுறுசுறுப்பாக எல்லா வேலையையும் முடிச்சுடுங்க. எதையும் நம்பியும் சோம்பேறித்தனத்தோடு உட்கார வேண்டாம். பிறகு மாலை வரை டென்ஷன் அதிகரித்துக் கொண்டே போகும். தலைவலி தலைபாரம் வரக்கூட வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கும் இதே போல தான். எந்த ஒரு விஷயத்தையும் கடைசி நிமிடம் வரை செய்யாமல் இருக்காதீங்க முன்கூட்டியே செஞ்சுக்கோங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நல்ல தூங்கி எந்திரிப்பீங்க. உங்களுடைய மனது நிம்மதி அடையும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் என்று இருக்காது. நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் அவ்வளவுதான். மற்றபடி வியாபாரம் செய்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். பாட்னர் தொல்லை கொடுக்கலாம். வேலை செய்பவர்களால் சங்கடங்கள் வரலாம். நிறைய பேர் லீவு போட்டுட்டாங்க. வேலைக்கு ஆளே இல்லை என்ற பிரச்சினைகள் எல்லாம் வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கவனமாக இருங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாள் பிரிந்த உறவுகளை நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அட்லீஸ்ட் தொலைபேசியிலாவது உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை தொடர்பு கொண்டு பேசுவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மற்றபடி தொழிலில் எந்த பிரச்சனையும் இருக்காது. டார்கெட்டை முடித்தே ஆக வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் கூடுதல் முயற்சிகளை எடுக்கவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சொன்ன வேலையை சரியாக முடிக்க முடியாது. அதனால் கவலைப்பட்டு உட்காருவீங்க. அதனால் கொஞ்சம் நேரம் வீணாகும். பிறகு எல்லா வேலையையும் அவசர அவசரமாக இழுத்து போட்டு செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். இதனால் இன்றைக்கு உங்களுக்கு கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாராவது திட்டிவிட்டால், மனது உடைந்து போகக்கூடாது. திட்டினதுக்கு என்ன காரணம் என்று சிந்தித்து செயல்படுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். அதனால் உங்களுடைய வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். நிறைய முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான நன்மைகளை செய்வதற்கு ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் முதலீடு செய்வது வங்கிகளில் முதலீடு செய்வது எல்.ஐ.சி போடுவது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்வது சிறப்பு.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் நிறைய வரும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டு அடுத்தவர்களை திட்டி உங்களை சுற்றி இருப்பவர்களை பரபரப்போடு வைத்திருப்பீர்கள். குறிப்பாக கொஞ்சம் உயர் அதிகாரிகளாக வேலை பார்ப்பவர்களுக்கு இன்று பெரிய அளவில் பிரச்சனைகள் வரும். ஆனால் அதை, கோபப்படுவதன் மூலம் சரி செய்ய முடியாது. கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களும் மனிதர்கள் தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வாக்குவாதம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது ஒரு பிரச்சனை, அடுத்தவர்களிடம் பேசும் போது அது சின்ன பேச்சு வார்த்தையாக தொடங்கி, பெரிய அளவில் சண்டையாக முடிந்துவிடும். வேலை செய்யும் இடத்தில் டீம் லீடர் மேனேஜரிடம் ஆர்கியூமென்ட் பண்ணாதீங்க. யாராவது ஏதாவது சொன்னால் சரி என்று சொல்லி அதோடு முடித்து விடுங்கள். வாக்குவாதம் செய்ய செய்ய பிரச்சனைகள் பெருசாகும். டென்ஷன் அதிகரிக்கும். ஆமாம், இல்லை என்ற வார்த்தையை தவிர இன்னைக்கு உங்க வாயில் இருந்து பெரிய அளவில் எதுவும் வரக்கூடாது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கஷ்டமான விஷயங்களுக்கு கூட, சுலபமாக ஒரு முடிவை எடுத்து விடுவீர்கள். எப்போதும் உன் கோபம் படக்கூடிய நீங்கள், இன்று பொறுமையாக நடந்து கொள்ளப் போகிறீர்கள். இதனாலேயே உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். பொறுமையாக இருந்தால் எந்த அளவுக்கு சாதிக்கலாம் என்பதை உணரும் அளவுக்கு நிறைய விஷயங்கள் நடக்கப் போகின்றது. அதையெல்லாம் அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். உங்களுக்கு இன்று வேலை நாளாக இருந்தாலும் சரி, விடுமுறை நாளாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் பிரஷர் இருக்காது. சந்தோஷமாக நிம்மதியாக இந்த நாளை நடத்திச் செல்பீர்கள். இந்த நாள் இறுதியில் கொஞ்சம் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷாப்பிங், குழந்தைகளுக்கு தேவையான பொருளை வாங்கிக் கொடுப்பது, போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீங்க.

- Advertisement -