இன்றைய ராசிபலன் – 03 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நினைத்தது நடக்க பொறுமை தேவை. சுய தொழிலில் லாபம் பெருக புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான நாளாக அமையப் போகிறது. குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னேறுவதில் இருந்து வந்த தடை விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பம் நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் நற்பலன்களை அடையப் போகிறீர்கள். குடும்ப அமைதிக்கு விட்டுக் கொடுத்து சொல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கண்மூடித்தனமான நம்பிக்கையை கைவிடுவது நல்லது. எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுய சிந்தனை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களே எதிராக செயல்பட வாய்ப்பு உண்டு.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திருப்புமுனையாக அமையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்களுக்கு கடமை உணர்வு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தையில் மந்த நிலை காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சறுக்கல் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இரக்க சுபாவம் அனுகூலமான பலன்களை கொடுக்கும். சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்க போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் விரிசல் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கும் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பொறுப்புகளை ஏற்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தவறாக புரிந்து கொண்ட சில விஷயங்களில் உண்மை நிலையை அறிவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் கூட்டு தொழில் செய்வதற்கான சிந்தனை செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய மனதிற்கு பிடித்த சில விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை இழக்க நேரலாம் தளர விடாதீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் தட்டி கழிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செல்லும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் திடீர் நாட்டம் செல்லும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சமயோசிதமாக செயல்படுவீர்கள். உங்களுடைய விடா முயற்சி உங்களுக்கு வெற்றியை தேடி தரும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.

- Advertisement -