- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 03 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 03 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால் சின்ன பின்னடைவு வருவது போல உணர்வீர்கள். பெரிசாக பிரச்சனைகள் வராது. சோம்பேறித்தனத்தை விடுத்து, சோர்வில் இருந்து வெளிவந்த அன்றாட வேலையில் முழு கவனம் செலுத்தி பாருங்கள். இன்று நிச்சயம் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை கொஞ்சம் உயர்வதற்கு நிறைய நல்ல வாய்ப்புகள் அமையும். தேவையில்லாத டென்ஷன் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தோடு செல்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நிதானமான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். எதிரிகளை மன்னித்துவிடுவீர்கள். பழைய பகையிலிருந்து விடுபட்டு மன நிம்மதி அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கடமையிலிருந்து தவறாமல் நடப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வேலையில் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளக் கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். பிள்ளைகளின் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனதிற்கு இதமான நாளாக இருக்கும். பகை விலகும். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்களுக்கு ஆதரவாக நான்கு பேர் பேசுவார்கள். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறக் கூடிய வாய்ப்புகள் அமையும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். முன்னேற்ற பாதையில் பயணிக்க நல்ல வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தீராத நோய் நொடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சோம்பேறித்தனம் வேண்டாம். சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ளும் போது தான் உங்களுடைய வெற்றி உங்கள் கையை வந்து சேரும். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப உறவுகளோடு பேசி பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பிரச்சனைகளை வெளியிடங்களில் யாரிடமும் சொல்லாதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புது முயற்சி வெற்றி தரும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்புவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சின்னதாக இடம் மாற்றமும் ஏற்படலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். சஞ்சலத்தில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மன அமைதியை தரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண்விரய செலவுகள் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். வேலையை பொருத்தவரை சுமூகமாக செல்லும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துவீர்கள். அலைச்சல் குறைய கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப ஓய்வும் கிடைக்கும். குடும்பத்தோடு நீண்ட நேரம் இருந்து, பேசி சந்தோஷமாக நிறைய நேரத்தை செலவழிக்க வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சற்று முன்