இன்றைய ராசிபலன் – 03 நவம்பர் 2023

Rasi-palan-new3
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தர்ம சங்கடமான சூழ்நிலை இருக்கும். அடுத்தவர்கள் உதவி என்று வந்து கேட்பாங்க. நீங்க செய்யணும் நினைப்பீங்க. ஆனா, செய்ய முடியாத சூழ்நிலை. உதாரணத்திற்கு ரொம்ப நெருங்கிய உறவோ, நண்பரோ, ஆயிரம் ரூபாய் கேட்டால், அதை உங்களால் கொடுக்க முடியாது. கையில் காசு இருக்காது. இல்லை என்று சொல்ல முடியாது. இப்படி மனசு சங்கடப்படும் அளவுக்கு ஏதாவது ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க, மனிதர்களாக பிறந்தால் சில நேரங்களில் சங்கடங்கள் வரத்தான் செய்யும். இன்று நீங்கள் அதை கடக்கணும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப கோவம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. யாராவது ஒருவர் உங்களை வந்து சீண்டிக் கொண்டே இருப்பார்கள். வேலை செய்யும் இடதிலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, உங்களை நச்சரித்து எடுத்திடுவாங்க. BP ஏறப்போகிறது. அதை சமாளிக்க வேண்டும் என்றால் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். டென்ஷனை குறைக்க மனதிற்குள்ளேயே ஸ்ரீராமஜெயம் சொல்லுங்கள். டென்ஷன் குறைந்த பிறகு அவர்களுக்கு பதிலடி கொடுங்கள். இன்றைக்கு நாள் ஓடிவிடும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு நிம்மதியாக இருக்கும். அந்த கடவுளே நேரில் வந்து ஆசீர்வாதம் செய்தது போல சந்தோஷம் இருக்கும். காசு இல்லையே என்று நினைப்பீங்க. கையில் பணம் வந்துவிடும். தீபாவளி செலவுக்கு பட்டாசு வாங்கணும் என்று யோசிப்பீங்க. கைக்கு காசு வரும். வாரா கடன் வசூல் ஆகும். போனஸ் கிடைக்கும். இப்படி சந்தோஷமாக இன்றைய நாள் கடந்து செல்லும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நினைத்தது நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கணும். முன்பின் தெரியாதவர்களிடம் காசு வாங்காதீங்க. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. மற்றபடி குடும்பத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அதை குடும்பத் தலைவனும் தலைவியும் பார்த்து பார்த்து செய்வீர்கள். அம்மா, அப்பா மாமனார் மாமியார் பிள்ளைகள் என்று ஒன்று கூடி இந்த நாள் சந்தோஷமாக செல்லும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று விடா முயற்சியானது விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். உழைப்பை முதலீடாக போட்டு நிறைய லாபத்தை எடுப்பீர்கள். மனநிறைவோடு சந்தோஷமாக இருப்பீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று தீபாவளி பரீட்சேஸ் செய்ய வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் கூட்டமாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள், செயின் வாட்ச், பர்ஸ், கைபேசி, இவைகளை ஜாக்கிரதையாக வச்சுக்கோங்க. கூட கூட்டிட்டு போற குழந்தைகளையும் கவனமாக பார்க்கவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடம்பும் மனசும் சோர்வாக இருக்கும். ஆனால் உங்களை உற்சாகப்படுத்த நண்பர்களும் உறவுகளும் உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கையில் நாம் சோர்ந்து போகும் போது, நமக்கு கை கொடுக்க நாலு பேர் இருந்தார்கள் என்றால் நீங்கள் சம்பாதித்ததிலேயே பெரிய விஷயம் இதுதான். அதை நினைத்து சந்தோஷப்படுங்கள். பெருமைப்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். போனஸ் கிடைக்கும். தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட எல்லா குவாலிட்டியும் உங்களுக்கு வந்துடும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி அதிகமாக இருக்கும். கையில் காசு இருக்காது. வீட்டில் பொண்டாட்டி சண்டை, பிள்ளைகள் புது துணி பட்டாசு கேட்டு பிரச்சனை, இதற்கிடையில் மற்ற உறவுகளுக்கு சீர் செய்ய வேண்டிய அவசியம். இப்படி நெருக்கலான சூழ்நிலையில் கூட நீங்கள் திறமையாக செயல்பட போறீங்க. எதையாவது பண்ணி பணத்தை ரெடி பண்ணி எல்லா பிரச்சினையையும் சரி செய்ய போறீங்க. கவலையே படாதீங்க. உங்களுடைய கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு சில நாட்களில் தீர்வு கிடைத்து விடும். ஜாலியா இருப்பீங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். எல்லாம் போச்சே என்று நினைத்த காரியம் கூட, முயற்சி செய்தால் இன்று வெற்றி அடையும். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். கமிஷன் தொழில் கூட நல்ல வருமானத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவனம் கூடுதலாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் இருக்கக் கூடாது. சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான வேலைகளை செய்யக்கூடாது. நேர்மையாக இருந்தால் பிரச்சினை இல்லை. பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழல் வந்தாலும் உண்மையை மட்டும் பேசுங்கள். நல்லதே நடக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம், ஜாக்கிரதை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் இருக்கும். வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் வரும். பண்டிகை நாளை எப்படி கொண்டாடுவது. இன்னும் பணம் வரவில்லை என்ற பிரச்சனை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சில பேருக்கு சம்பளம் கூட வந்து இருக்காது. ஆனால் எதிர்பாராத சமயத்தில் உங்கள் கஷ்டத்தை எல்லாம் தீர்க்க கடவுள் ஒரு வழியை காட்டிக் கொடுப்பான். முயற்சிகளை மட்டும் கைவிடாதிங்க. சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள மன தைரியம் தான் முதலில் முக்கியம். பயப்படாதீங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக தான் இருக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். வாரா கடன் வசூல் ஆகும். எதிர்காலத்திற்கு பணம் தேவை என்பதை உணரும் அளவுக்கு சில அனுபவ பாடங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் டார்ச்சர் கொஞ்சம் இருக்கும். சில பேருக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். அதனால் புதிய வேலை தேடுவதில் கூட முயற்சி செய்வீர்கள். அதிலும் அவசரப்படாதீங்க கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பு எதுவுமே பூர்த்தியடையாது. நாம் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் எதற்கு. சில சோதனைகளை கொடுத்த பின்பு தான் கடவுள் உங்களுக்கு நல்லதை கொடுப்பார். கொஞ்சம் பொறுமையா இருங்க. உங்களுடைய பிரச்சினைகளை வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வாங்க. சந்தோஷமான குடும்பமும் மன நிம்மதியை தரும். பண கஷ்டமும் ஒரு சில நாளில் சரியாகிவிடும்.

- Advertisement -