இன்றைய ராசிபலன் – 04 பிப்ரவரி 2024

Rasi-palan-new4
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு நாளை புதிய முயற்சிகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும். நம்பிக்கையோடு உங்களுடைய வேலைகளை தொடங்கலாம். அலுவலக பணியில் எந்த சிக்கலும் இருக்காது. சொந்த தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் கூட விலகும். கடன் சுமை படிப்படியாக குறையும். நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுபகாரிய பேச்சுகள் தொடங்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நிறைய வேலை பளு இருக்கும். நாலு பேர் வேலையை ஒட்டு மொத்தமாக நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். இதனால் வரக்கூடிய தலைவலி உங்களை சோர்வடைய செய்யும். ஆகவே இன்று காலை முதலே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு தெம்மோடு செயல்படுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பதராத காரியம் சிதறாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களால் முடிக்க முடியாத அளவு டார்கெட்டை கொடுத்தாலும் டென்ஷன் ஆக கூடாது. ரிலாக்ஸ் ஆக எல்லா வேலையும் செய்யணும். டார்கெட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முடியுங்கள். முடியாததை, முடியாது என்று தைரியமாக சொல்லுங்கள். முடியாத காரியத்தை இழுத்து போட்டுக் கொள்ள வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமான ஆர்வக்கோளாறு இருக்கும். இன்றே எல்லா வேலைகளிலும் நல்ல பேர் கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ரொம்ப அவசர அவசரமா வேலை செய்வீங்க. ஒரே நாளில் பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்று தோன்றும். ஆர்வக்கோளாறு என்று சொல்லுவார்கள் அல்லவா அது உங்களுக்கு என்று அதிகமாக இருப்பதால், சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் சரியாக பிளான் பண்ணி செய்யப் போறீங்க. நீங்க டார்கெட் வெச்சா அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த அளவுக்கு திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கப் போகின்றது. எதிரிகளை சரியான நேரத்தில் சமாளித்து பின்னுக்கு தள்ளக்கூடிய திறமை இன்று உங்களிடத்தில் இருக்கும். இதனால் பெரிய அளவில் வெற்றி காண்பீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்கள் பேசக்கூடிய வார்த்தைகளை உங்கள் காதில் போட்டுக் கொள்ள மாட்டீர்கள். இதனால் எதிராளிகள் உங்கள் மீது எரிச்சல் அடைய வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு நாளை ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். அலுவலக வேலை வியாபாரம் இதற்கெல்லாம் கொஞ்சம் லீவு விட்டு குடும்பத்தை கவனிக்க போறீங்க. நல்லா சாப்பாடு, உறவுகளோடு மகிழ்ச்சி நிறைந்த நேரம் என்று இன்றைய நாள் சிறப்பாக செல்லும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக செலவு செய்வீர்கள். சில பேர் ஆன்மீகத்தில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நற்பண்புகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையப் போகின்றது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதற்கான ஊக்கத்தை அடுத்தவர்களுக்கும் தருவீர்கள். உங்களை பார்த்து நான்கு பேர் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு இன்று உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். பெரிய அளவில் மனதுருப்தி கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தால் அது உடனடியாக முடியாது. இழுபறியாக இழுத்துக் கொண்டே இருக்கும். இதனாலேயே வீட்டில் பிரச்சனை வரும். கணவன் மனைவிக்குள் சண்டை வரும். இந்த நாள் கொஞ்சம் சஞ்சலத்தோடு தான் நகர்ந்து செல்ல போகிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முன்கோபத்தை வெளி காட்டாதீங்க நாளை எல்லாம் சரியாகிவிடும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் விடுமுறை நாளை ரொம்ப ரொம்ப கொண்டாடனும் என்று நினைப்பீர்கள். என்ஜாய் பண்ண வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம், ஈடேறாது. எதிர்பாராத விருந்தாளிகளின் வருகை உங்களுடைய ஓய்வை கெடுக்கும். நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்று நினைப்பீர்கள். அடுத்தவர்கள் வந்து அந்த சாப்பாட்டை சாப்பிட்டு விடுவார்கள். இப்படி சின்ன சின்ன ஏமாற்றங்கள் இன்று வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனசைத்தளர விடாதீங்க. ஜாலியா எடுத்துக்கோங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. விடுமுறை நாளாக இருந்தாலும் மனது அமைதியாக இருக்காது. ஏதோ ஒரு பிரச்சனையை நினைத்து மனசு அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இருக்கும். மனைவிக்கும் குழந்தைக்கும் எதுவுமே செய்யவில்லையே என்று சில பேர் கஷ்டப்பட வாய்ப்புகள் உள்ளது. ரொம்ப யோசனையாக இருந்தால் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். மனது சந்தோஷமாக இருக்கும். இன்று குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் சின்ன மேம்பாடு தெரியும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இன்று ஒரு விடிவு காலம் பிறக்கும். நிதி நிலைமை சீராக இருக்காது. சில பேருக்கு அன்றாட செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

- Advertisement -