இன்றைய ராசிபலன் – 04 ஏப்ரல் 2023

apr 04 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்கள் உங்களை பார்த்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். சமூக அக்கறை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான விரயங்கள் வரலாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கியமான சில ரகசியங்கள் தெரிய வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாய்ப்புகளை நோக்கி பயணிப்பீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அசாதாரணமான விஷயங்களை கூட சாதாரணமாக செய்து காட்டக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சிலர் மனக்குறைகளை கூறிய ஆதங்கப்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக விமர்சனங்கள் வரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்ப ஒற்றுமையில் இடையூறுகள் வரக்கூடும் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத வாக்குவாதங்கள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறுக்கு வழியை நாடாதீர்கள், பிரச்சனை வரும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த பணம் வரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மூன்றாம் நபர்களை கொண்டு வராதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருக்கும் சூழல் கலகலப்பாக இருக்கும்படி அமைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடி மாற்றங்கள் ஏற்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. இதுவரை எதிர்பாராத சில விஷயங்கள் எல்லாம் நடக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பேச்சில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி பலிதமாகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்படக்கூடிய மாற்றங்கள் நற்பலன்களை கொடுக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகம் அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் அந்தஸ்து உயரும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் தீரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப ஒற்றுமையில் சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் பதட்டப்படாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன் கோபம் பிரச்சனையாக வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய பணம் வரும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயத்தில் ஏமாற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சந்தேகம் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களுடைய ஆதரவால் வேலைகள் சுலபமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் செயலில் கவனமுடன் இருப்பது அவசியமாகும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்தால் ஆபத்து வரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பால் உயர்வீர்கள்.

- Advertisement -