இன்றைய ராசிபலன் – 04 ஏப்ரல் 2024

Rasi-palan-new4
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையும் அரை மணி நேரம் முன்னாடியே தொடங்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பஸ் பிடிக்க அரை மணி நேரத்திற்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்புங்க. தேவையில்லாத அலைச்சல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் சின்ன சின்ன தாமதங்கள் ஏற்படும். அதன் மூலம் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பாத்து நடந்துக்கோங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் செய்யும் இடத்தில் பார்ட்னரோடு சேர்ந்து நிறைய புதுப்புது யுக்திகளை அறிமுகப்படுத்துவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்‌ வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கப் போகின்றது. சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு கிடைக்கும். தொழிலில் நீங்கள் போட்ட முதலீடு பத்து மடங்க லாபத்தை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சந்தோஷமாக இந்த நாளை என்ஜாய் பண்ண போறீங்க. வாரா கடன் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு பலன் கிடைக்கும். வாழ்க்கையில் உயர தேவையான நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தவறவிடாமல் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை செய்யும் நேரத்தை கொஞ்சம் கூட்டிக் கொண்டால் போதும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம். நேரத்தை வீணாக்காதீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கப் போகின்றது. சந்தோஷமாக இந்த நாளை தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எல்லா வேலையையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே முடிச்சிருவீங்க. பாஸ் கிட்ட நல்ல பெயர் வாங்குவீங்க. சில பேருக்கு பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. கமிஷன் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளை சுறுசுறுப்பாக தொடங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்து நல்லபடியாக முடிக்க போறீங்க. சந்தோஷம் நிறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் பெற்றவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு இருப்பீர்கள். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்க. நீங்க எடுத்த முடிவிலிருந்து மாற மாட்டீங்க. அடம்பிடித்து சில விஷயங்களை சாதிக்க கூடிய நாள் தான் இன்று. உங்களுடைய மனசு உடம்பு எல்லாம் இரும்பு போல இருக்கும். தீர்க்கமான முடிவை எடுத்து திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு, நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பெருசாக பிரச்சனை வராது. உங்களுடைய வேலையை சரியா முடிச்சிடுங்க. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். கடனுக்கு நம்பி அடுத்தவர்களுக்கு பொருள் கொடுக்காதீங்க. கைக்கு காசு வந்த அப்புறம் பொருள் கொடுத்தால் போதும். நம்பிக்கையின் பேரில் எதுவும் இன்னைக்கு செய்யாதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். நிறைய நல்லது நடக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். குறிப்பாக பெண்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மாமியார் மருமகள் உறவு பலம் பெறும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் புதுசாக வேலைக்கு திட்டமிட வேண்டும். புதிய வேலைக்கு அப்ளிகேஷன் போட வேண்டும் என்றால் இன்னைக்கு அந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பகையை சம்பாதிக்க கூடிய நிலை உண்டாகும். யாரிடமும் நீங்களே சண்டை போட போகாதீங்க. யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் நிற்காதீர்கள். நியாயத்தை கூட எடுத்து சொல்லாதீங்க. அமைதியாக இருங்க. வாயை மூடிக் கொள்ளவும். உங்களுடைய வேலையை மட்டும் பார்க்கவும் நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலமை சீராகும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனத்தோடு இருக்கவும். ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடல் எடையோடு இருப்பவர்கள் அதை குறைப்பதற்கான வழியை பாருங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எப்படிடா இந்த மாத செலவை சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வழியை ஆண்டவன் காண்பித்துக் கொடுப்பான். செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் மாதக்கடைசியில் பிரச்சனை இருக்காது. மனைவி சொல்லே மந்திரம் என்று கேட்டு செயல்படும் மீன ராசிக்காரர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -