இன்றைய ராசிபலன் – 04 நவம்பர் 2023

Rasi-palan-new4
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் கிடப்பில் இருந்த வேலைகளை நாளைக்கு தூசி தட்டுங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். முக்கியமான பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்களுடைய கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்வீர்கள். மனபாரத்தை இறக்கி வைப்பீர்கள். செலவுக்கு தேவையான பணம் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் உறவினர்களை கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். பிரச்சனை என்று வந்தால் பதிலுக்கு பதில் பேசாமல் இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய்மாமன் வழி உறவால் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. தீபாவளி பர்சேஸ் நல்லபடியாக செய்து முடிக்க போறீங்க.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததெல்லாம் நடக்காது. ஆனால் நடக்கக் கூடிய விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரணை மன நிம்மதியை கொடுக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. மாமியார் மருமகள் உறவுகளுக்கு இடையே சின்ன சின்ன சிக்கல்கள் வரும். குடும்ப விஷயத்தை மூன்றாவது நபர்களிடம் பகிர வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வருமானத்தில் பிரச்சனை இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மனசு சோர்வாக இருக்கும். உற்சாகத்தோடு வேலை செய்ய வேண்டும் என்றால் நல்ல பாட்டு கேளுங்கள். உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யுங்கள். பிடித்த கடவுளின் நாமத்தை சொல்லலாம். வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரலாம் நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளும் நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக எல்லா வேலையும் முடித்துவிட்டு நல்ல பெயர் வாங்குவீங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தொடங்கும். இருந்தாலும் போகப் போக உங்களுடைய வேலைகளை சரிவர செய்ய தொடங்கி விடுவீர்கள். இந்த நாள் இறுதியில் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க. ஜங்க் ஃபுட்டை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். பிள்ளைகளால் மனது சந்தோஷப்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மாமியார் வழி உறவால் நன்மை நடக்க வாய்ப்புகள் உள்ளது. செலவுக்கு ஏற்ற வருமானம் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும். நீண்ட தூர பயணத்தை தடுப்பது நல்லது தவிர்ப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் போனஸ் கிடைக்கும். தீபாவளியை கொண்டாட பிளான் பண்ணலாம். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கமிஷன் தொழிலில் நிறைய வருமானம் வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை பளுவின் காரணமாக மன உளைச்சல் ஏற்படும். எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாமல் திணறுவீர்கள். வியாபாரிகளுக்கு சின்ன சின்ன தோல்விகள் உண்டாகும். பெரிய அளவில் முதலீட்டை செய்ய வேண்டாம். முன்பின் தெரியாதவர்கள் சொல்லக்கூடிய பேச்சைக் கேட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஆன்லைன் பிசினஸில் கொஞ்சம் பிரச்சனை வரும் ஜாக்கிரதை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் பிரஷர் இருக்கும்.‌இந்த வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்.‌ முன்கோபம் வேண்டாம். பிரச்சனைகளை பொறுமையாக எடுத்துச் சொன்னால் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வாகனங்களில் செல்லும்போது ஹெட் போன் காதில் போடாதீங்க.

- Advertisement -