இன்றைய ராசி பலன் – 26-11-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
mesham
உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.

ரிஷபம்:
rishabam
ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

மிதுனம்:
Midhunam
குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும்.

கடகம் :
Kadagam
நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார்.

சிம்மம்:
simam
இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும்.

கன்னி:

உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

துலாம்:

நிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ‘சில எதிர்பாராத பிரச்சினைகளால் குடும்பத்தில் அமைதி கெடும். ஆனால் கவலைப்பட எதுவும் இல்லை. காலப்போக்கில் இது தீர்க்கப்படும். இப்போதைக்கு அதை லைட்டாக எடுத்துக் கொண்டால் போதும். என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் உத்தரவு போட்டால், காதலருடன் பிரச்சினை ஏற்படும். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள்.

விருச்சிகம்:

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும்.
தனுசு:

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பானங்களில் இருந்து தள்ளியிருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும்.

மகரம்:
magaram
குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.

கும்பம்:

உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் – நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் – பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

மீனம்:

சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. உங்களது முன்னேற்றம் முன் கோப குணத்தால் தடைபடலாம் எனவே இன்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -

உங்களுடைய இந்த நாள் இந்த ராசி பலன் மூலம் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறோம்.

- Advertisement -