இன்றைய ராசிபலன் (04 டிசம்பர் 2021)

rasi-palan-04/12/21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேலை பளு அதிகரிக்கும் என்பதால் சுறுசுறுப்பு குறைந்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறுசிறு சங்கடங்கள் நேரலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான காரியங்களைக் கூட சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். சுய தொழில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் சில தொந்தரவுகள் வரலாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகோதரர் வழியில் அதிக நன்மைகள் நடக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில ராஜ தந்திரங்களை கற்றுக் கொள்ளும் பாக்கியம் அமையும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமையை வெளிப்படுத்த கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உங்கள் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஏற்பதில் சிறுசிறு சங்கடங்கள் உருவாகலாம். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். சுய தொழிலில் ஏற்றம் காணும் நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்றவர்களுடைய பேச்சில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையக்கூடும் எனவே மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரித்து காணப்படும். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் சுய நலத்தை தவிர்த்து மற்றவர்களை பற்றிய சிந்தனையை மேற்கொள்வது நல்லது.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உங்களின் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் பாக்கியம் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்தது நடக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு பெருகும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் வருமானத்தை உயர்த்த கூடிய புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீண்ட நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறதே என்று நினைத்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்க கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. உங்களின் படிப்படியான முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் மந்தநிலை காணப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். சுய தொழில் இருப்பவர்களுக்கு இனம்புரியாத கவலைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தகர்த்து வெற்றி காணும் நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -