இன்றைய ராசிபலன் – 05 ஜனவரி 2024

Rasi-palan-new5
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று நல்லது கெட்டதை ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கும் தெளிவை பெற்றிருப்பீர்கள். குழப்பமான பிரச்சனைகளுக்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சில பேருக்கு நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக வாய்ப்பு உள்ளது. பணத்தட்டுப்பாடு உண்டாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப நிம்மதியாக இருக்கும். பொழுதுபோக்கில் உங்களை நீங்களே ரிலாக்ஸ் செய்து கொள்வீர்கள். பிரச்சனைகள் எல்லாம் பறந்து போனது போல உணர்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நன்மை நடக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதம் இன்று உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். சாமிக்கும் நன்றி சொல்லுங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்போடு முடித்து விடுவீர்கள். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சில இடங்களில் பணத்தால் சண்டை சச்சரவுகள் வரும். ஜாக்கிரதியாக இருங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். யாரிடமும் சண்டைக்குப் போகக்கூடாது. வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும். அனாவசியமாக பேசுவதை குறைத்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்றைக்கான வேலையை மட்டும், இன்று முடிப்பதில் அதீத கவனம் தேவை. சோம்பேறித்தனப்பட்டு இன்றைய கடமைகளை செய்ய தவறுவது பிரச்சினையை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சுயநலத்தோடு சிந்திக்கக் கூடாது. சுயநலத்தோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது. அடுத்தவர்களுக்கு இன்று நீங்கள் செய்யும் உதவி, உங்கள் குடும்பத்திற்கு நன்மையை செய்யும். ஆகவே வாய்ப்பு கிடைத்தால் இன்று ஓடிப்போய் உதவி செஞ்சிருங்க நல்லது நடக்கும். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாவற்றிலும் சுமூகமான போக்கு நிலவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் வரவு செலவு கணக்குகளை சரியாக பார்க்க வேண்டும். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இல்லை என்றால் கையில் இருக்கும் சேமிப்பு மொத்தம் கரைய வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் வரக்கூடாது. யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து நடந்துக்கோங்க. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு நல்ல பெயர் புகழ் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட இன்று சந்தோஷம் படும்படியான லாபம் மனநிறைவோடு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. ஏதாவது ஒரு வழியில் யார் ரூபத்திலாவது உங்கள் மனது சந்தோஷப்படும்படி ஒரு செய்தி வந்துவிடும். அது தொலைபேசியில் வந்தாலும் உங்களுக்கு லாபம் தரக்கூடிய செய்தியாக அமையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பெண்களுக்கு இன்று கொஞ்சம் வீட்டில் வேலை பளு அதிகமாக இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எதிரிகளை போட்டி போட்டு ஜெயிக்க கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களைப் பார்த்தாலே எதிராளிக்கு பயம் வந்துவிடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சிக்கல்கள் முடிச்சு அவிழ்க்கப்படும். வாழ்க்கையை சுலபமாக வாழ்ந்து விடலாம் என்று நம்பிக்கை பிறக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களுடைய மனது காயப்படும் படி பேசக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி கருத்து இருக்கும். உங்களை போலவே அடுத்தவர்களும் சிந்திக்க மாட்டார்கள். ஆகவே அடுத்தவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள். சிக்கலான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். ஹெல்மெட் அணிந்து கொள்ளவும்‌. வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையில் கவனத்தோடு சமைக்கவும். கவனக் குறைவாக சமையல் வேலையை செய்யக்கூடாது. கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும். ரத்த காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தவறு நடந்து விடுமோ என்று யோசிக்க கூடிய விஷயங்கள் எல்லாம் இன்று சரியாக முடியும். உங்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு நல்லது நடக்கும். மனதை தளர விடாமல், உங்கள் வேலையை கவனமாக செய்தாலே போதும் வெற்றி உங்கள் பக்கம் நிற்கும்.

- Advertisement -