இன்றைய ராசிபலன் – 05 பிப்ரவரி 2024

Rasi-palan-new5
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான நாளாக அமையும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான சவாலான சில விஷயங்களை தைரியமாக எதிர்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் நல்லதும் நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடன் உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். ரொம்பவும் சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். முன் கோபப்படுவதை தவிர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நீங்க வேற லெவல் முன்னேற்றத்தை அடையலாம். வேலை செய்யும் இடத்தில் கவன குறைவாக இருக்கக் கூடாது. எந்த ஒரு பொறுப்பை உங்கள் கையில் ஒப்படைத்தாலும் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது சாந்தமாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சரி, அமைதியாக அதை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். கடின உழைப்பிற்குப் பின்பே சில வெற்றிகளை அடைய முடியும். வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் வரும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருக்கும். பெரியவர்கள் வார்த்தையை உதாசீனப்படுத்தாதீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சவாலை எதிர்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். இருந்தாலும் உங்களுடைய மன உறுதியும் தைரியமும் உங்களை எந்த சூழ்நிலையிலும் தோற்க விடாது. வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் பாராட்டும் கிடைக்கும். தொழிலில் மந்தமான போக்கே நிலவும். கண்மூடித்தனமாக மூன்றாவது நபர்களை நம்ப வேண்டாம். அநாவசியமாக யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது உற்சாகத்தோடு இருக்கும். மகிழ்ச்சியோடு எல்லா வேலைகளையும் செய்வீர்கள். பெரிய அளவில் கஷ்டம் வந்தால் கூட அதை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்கம் பக்குவம் இன்று உங்களிடத்தில் இருக்கும். இன்று வந்த கஷ்டம் நாளை நிச்சயம் நம்மை கடந்து செல்லும் என்ற நம்பிக்கையோடு வேலைகளை செய்வீர்கள். சண்டையாக இருந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனசுக்கு பிடிச்ச விஷயங்கள் நடக்கப் போகின்றது. மனசுக்கு பிடித்த நபரை சந்திக்கலாம். மனதிற்கு பிடித்த வேலையில் சேரலாம். மனசுக்கு பிடிச்ச பொருளை வாங்கலாம். இப்படி உங்களுக்கு பிடித்தமான வேலைகள் மட்டும் தான் இன்று நடக்கும். பிடிக்காதவர்கள் எல்லாம் காணாமல் ஓடிப் போய்டுவாங்க. நல்லது நடக்கக்கூடிய இந்த நாளில் குடும்பத்தோடு குல தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கலான நாளாக தான் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். எல்லா வேலைகளும் இழுபறியாக இருக்கும். ஒரு வேலையை செய்தோமா முடித்துவோமா என்ற பேச்சுக்கே இன்று இடமில்லை. ஒரு வேலையை செய்வீங்க, முடிக்கலாம் நினைப்பிங்க, ஆனா அந்த வேலையை முடிக்கக்கூடிய வாய்ப்புகளையே கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போவதில்லை. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

விருச்சிகம்


விருச்சக ராசி காரர்களுக்கு இன்று ரொம்பவும் சோம்பேறித்தனமான சூழ்நிலை இருக்கும். வாரத்தின் தொடக்க நாள் தான். இன்றைக்கு சோம்பேறித்தனமா என்று கவலைப்படாதீங்க. மனதை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு, நாளைக்கான வேலையையும் இன்றைக்கே சேர்த்து செய்ய வேண்டும் என்று நினையுங்கள். நிச்சயம் சோம்பேறி தனம் உங்களை விட்டு காணாமல் போய்விடும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரக்கூடாது. ஆத்திரப்பட்டு நீங்கள் செய்யக்கூடிய விஷயம் உங்களை தோல்வி அடையச் செய்யும். எந்த விஷயத்திலும் பொறுமையாக இருக்கவும். யாராவது அசிங்க அசிங்கமா திட்டினா கூட அதை நீங்க பொறுத்துதான் போனமே தவிர பதிலுக்கு எதிர்த்து பேசாதீங்க. உங்களுடைய அமைதியே இன்னைக்கு உங்களுக்கு வெற்றி தான்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டசாலிகளாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு உங்களுக்கு கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் புகழும் அளவுக்கு நிறைய நல்லது நடக்கப் போகின்றது. குறிப்பாக பிரபல்யமாக இருக்கக்கூடியவர்களுக்கு இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கமிஷன் தொழில் அமோகமாக இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வருமானத்தை வைத்து சந்தோஷமாக குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வீர்கள். மாத சம்பளக்காரர்களுக்கு சம்பளம் வந்திருந்தால் சந்தோஷம் இரட்டிப்பு. சம்பளம் வராதவர்களுக்கும் இன்று சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பற்றிய அனாவசிய பேச்சு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உறுதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். பெரிய கல்லை தூக்கி தலையில் வைத்தால் கூட அந்த பாரத்தை சுமக்கும் சக்தி இன்று உங்கள் மனதளவில் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மனசுக்கு பிடித்தவர்களின் சந்திப்பு நிம்மதியை தரும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேளுங்கள்.

- Advertisement -