இன்றைய ராசிபலன் – 05 ஏப்ரல் 2023

apr 05 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லுங்கள். தேவையற்ற சண்டைகளை வளர்க்க விடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலம் அறிந்து செயல்படுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சகோதரர்களால் நன்மைகள் நடக்கக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தகாத நண்பர்களுடன் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது நம்பிக்கை துளிர் விடக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் வரக்கூடும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுக்கு உதவுவார்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நற்செய்திகள் காத்திருக்கிறது. மனைவி வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் சமாளிக்க கற்றுக் கொள்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் உண்டு. எதற்கும் துணிச்சலுடன் இருப்பது நல்லது. குடும்ப அமைதிக்கு மௌனம் காப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களுக்காக உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன் கோபம் வேண்டாம்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விமர்சனங்கள் சங்கடத்திற்கு உள்ளாக்கலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதலை மேம்படுத்துவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை மறவாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒளிவு மறைவின்றி இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செயல்களில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பாதையை நோக்கி பயணிப்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மனதில் மேலோங்கி காணப்படும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுபெறும். சுய தொழிலில் லாபம் கூடுதல் முயற்சி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. மனதில் பட்டதை எல்லாம் பேசி விட முடியாது. கணவன் மனைவி உறவில் இருக்கும் விரிசல் மறைய முயற்சி மேற்கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய எண்ணம் ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுப காரிய முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தை சீர் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேலை சுலபமாக முடிவடைய வாய்ப்புகள் உண்டு. முடியவே முடியாது என்று நினைத்த ஒரு காரியம் முடியும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பகைவர்களினால் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெருந்தன்மை தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் போராடித் தான் பெற வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்களுடைய பிடிவாதத்தை அனுசரித்து செல்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரலாம். கிடைக்கின்ற வாய்ப்புகளை தவற விடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் உழைப்பு தேவை.

- Advertisement -