இன்றைய ராசிபலன் – 05 ஏப்ரல் 2024

Rasi-palan-new5
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனசு சந்தோசமாக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை ஆர்வத்தோடு தொடங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. தாய் வீட்டிற்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க கூடிய வாய்ப்புகளும் சில பெண்களுக்கு அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்குவது, புது வேலைக்கு அப்ளிகேஷன் போடுவது, பதவி உயர்வு போன்ற முயற்சிகளை மேற்கொள்வது வெற்றியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலுக்கு சூடு தரக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். உங்களுக்கு உதவி செய்ய, உடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள் இருப்பார்கள். பெரிய பெரிய சிரமம் கொடுக்கக் கூடிய வேலையை கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். தொழிலில் புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்தைத் தரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களை ஊக்குவிக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடவும். மன குழப்பமாக இருந்தால் அந்த நேரத்தில் பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தால் யாராவது ஒருவர் வாயை மூடிக்கொள்ளவும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். ஜபிள்ளைகளின் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். அன்பு வெளிப்படக்கூடிய நாளாக அமையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழவும் வாய்ப்புகள் உள்ளது. இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். கலை துறையின்ருக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக அமையும் ‌

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கையை அடுத்தவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுவீர்கள். இதனாலேயே உங்களுடைய நிம்மதி கெடும். நமக்கு என்ன இறைவன் கொடுத்திருக்கின்றானோ, அதை வைத்து திருப்தி அடைவது தான் நல்லது. அனாவசியமாக அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களுக்கு உண்டான வேலையை மட்டும் செய்தால் இன்று நன்மை நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உறுதியான மனப்பான்மை இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நல்லதே நடக்கும். முன்னேற்றம் அடையக்கூடிய நாள் இது. எதிரிகள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். நிறைய தண்ணீர் குடிங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து பதவி தேடி வரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிலும் தலை கனத்தோடு நடப்பீங்க. தலை நிமிர்ந்து நடப்பீங்க. உங்களைப் பார்த்து ஏளனமாக பேசியவர்கள் முன்பு வெற்றிக்காண கூடிய தருணங்களும் ஏற்படும். கவலைப்படாதீங்க உங்களுக்கான நல்ல நேரம் இன்னைக்கு சூப்பரா வேலை செய்யும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகம் தரக்கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான வேலை உங்களுக்கான வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும். உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் பெருசாக எந்த பிரச்சனையும் வராது. அமைதியாக இந்த நாளை கடந்த செல்வீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு அமையும். பகையாளியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களைப் பார்த்து நிறைய பேர் பொறாமை படுவாங்க. அந்த அளவுக்கு நல்லது நடக்கும் கடன் பிரச்சனை நீங்கும். வருமானம் உயரும். மனைவிக்கு பிடித்த ஆடம்பரமான பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் ஆரோக்கிய பிரச்சனை சரியாகும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய விஷயங்களில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் நல்லது நடக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். செலவுக்கு ஏற்ப வருமானத்தை அந்த கடவுள் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான்.

- Advertisement -