இன்றைய ராசிபலன் – 05 ஜூன் 2022

today rasi palan 5/06/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுப செய்திகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீங்கள் செய்யும் செயலில் திருப்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படலாம் எச்சரிகை தேவை.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல அமைப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட கூடிய வாய்ப்புகள் அமையும் எனவே விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

- Advertisement -

மிதுனம்
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தில் அமைதி தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயத்தில் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

கடகம்:

- Advertisement -

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஒற்றுமையில் மற்றவர்கள் இடையூறாக செயல்படக் கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதுரியம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பல தடைகள் வந்தாலும் வெற்றி உங்களுக்குத் தான். ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணியில் குறுக்கீடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களைப் பற்றிய சிந்தனைகளை தூக்கி எறிந்து விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுய கௌரவம் பாதிக்கும் பல நிகழ்வுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கத் துவங்கும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அறிவாற்றல் பாராட்டும் படியாக அமைய இருக்கிறது. தடைபட்ட காரியங்களில் மீண்டும் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசும் திறன் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சிந்தித்து பார்க்காமல் முடிவெடுப்பது நல்லது அல்ல.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தக் கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடையும் பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உபயோகமாக எதையாவது செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியத்தில் அமோக வெற்றி உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் குடும்பத்தில் வரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும், அது காலதாமதமாகும். பொறுமையை கையாள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு பிரச்சினையைப் பற்றிய சிந்தனையையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாமல், வருவது வரட்டும் என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் ஆதரவு கிடைத்து, புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டாகும்.

- Advertisement -