இன்றைய ராசிபலன் – 05 டிசம்பர் 2022

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உறவினர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் உங்களுக்குரிய சொத்துகளின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய தினம் உங்கள் ஆசைகள் நிறைவேறும். நேரடி, மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணியிடங்களில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டானாலும் அதனால் லாபம் ஏற்படும்.

கடகம்:
கடக ராசியினர் இன்றைய தினம் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அன்னிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் உடன்பிறந்தவர்களால் உதவி பெறுவீர்கள். கோர்ட், வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த விடயங்களில் வெற்றி கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் சிலருக்கு உடல் மற்றும் மன அளவில் சோர்வு ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். பிறர் உடனான பேச்சுக்களில் கவனம் தேவை. வீட்டில் இருப்பவர்களுக்கு சிறிய அளவு மருத்துவ செலவு ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். சிலர் ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். விருந்து, கேளிக்கைகள் போன்றவற்றிற்கு சென்று வருவீர்கள். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக தீரும். தொழில் வியாபாரங்களில் பணியாளர்களால் லாபமும், புகழும் கிடைக்கும், அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி உண்டாகும். சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். சிலருக்கு சிறிய அளவிலான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிலர் புதிய நகை, வாகனம் போன்றவற்றை வாங்குவார்கள்.

மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். சிலருக்கு பெண்கள் வழியில் தனலாபம் உண்டாகும். பூர்வீக சொத்து, பூமி சம்பந்தமான விடயங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். பிரிந்துசென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் பிறருடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். சிலருக்கு எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சராசரியான நிலையை இருக்கும். கலைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகளில் தாமதங்கள் ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடங்களில் சிலருக்கு பணிச்சுமை கூடும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மருத்துவ ரீதியிலான செலவுகள் சிலருக்கு ஏற்படும்.

- Advertisement -