இன்றைய ராசிபலன் – 06 ஜனவரி 2024

Rasi-palan-new6
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குதூகலத்தோடு தொடங்கும். கண் விழிக்கும் போதே சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கும். அப்படி ஒரு நல்ல செய்தி செவிகளை எட்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீங்க. எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறக்கூடிய நல்ல நாள் இது. கணவன் மனைவிக்கிடையே வந்த பிரச்சனைகள் சரியாகும். வியாபாரத்தில் சின்ன சின்ன போட்டிகளும் பொறாமைகளும் இருக்கும். அதை திறமையாக சமாளித்துக் கொள்வீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனது லேசாக இருக்கும். எந்த கவலையும் இல்லாதது போல உணர்வீர்கள். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யும்போது மட்டும் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபர்கள் ஆலோசனையை எடுத்துக் கொள்ள வேண்டாம். அனுபவ சாலிகள் நண்பர்கள், உங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்வதை மட்டும் காதில் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி பேசக்கூடாது அல்லவா. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்கணும். மேலதிகாரிகளுக்கு மரியாதை தரனும். இப்படி எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள். தேவையில்லாத இடத்தில் கூடுமானவரை பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. இதனால் உறவுகளுக்குள் பிரிவு வரக்கூட வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக தான் இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுலபமாக முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். நண்பர்கள் உறவுகளின் சப்போர்ட் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி கரமாக இருக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் உண்டு.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் மனது ஈடுபடாது. உடல் அசதி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு உணவை சாப்பிட்டு விடுங்கள். மாணவர்கள் உங்களுடைய படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கூடாத நட்பை வெட்டி விடவும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெற்றவர்களிடம் சொல்லவும். மற்றபடி நிதி நிலைமை மேம்படும். வாரா கடன் வசூல் ஆகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலை வேலை என்று இல்லாமல் கொஞ்சம் உடம்பையும் பார்த்துக்கோங்க. ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் கூடுமானவரை நீங்களே மருந்து எடுத்துக் கொள்ளாமல், மருத்துவரை அணுகவும். வீட்டில் வயதானவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தையும் கவனம் செலுத்துங்கள். வேலையில் பிரச்சனைகள் இல்லை சுமூகமாக செல்லும். வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்கவும். சின்ன சின்ன வியாபாரிகள் இன்று வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நிதானத்தை இழக்கும் பட்சத்தில் சில பிரச்சனைகள் வீடு தேடி வரத் தொடங்கிவிடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வார்த்தைகள் கவனம் தேவை. முன்கோபத்தை குறைக்கவும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவும். சக மனிதர்களை ஏளனமாக நடத்தக்கூடிய வழக்கம் உங்களிடத்தில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய முன்னேற்ற தடைக்கு காரணம் அதுதான்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சட்டைக்கு கஞ்சி போட்டது போல வெரப்பாக இருக்கக் கூடாது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நடக்கவும். நீங்கள் மேலதிகாரிகளாகவே இருந்தாலும் உங்களுக்கு கேழே வேலை செய்பவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அதிகார வர்க்கத்தை காட்டாதீங்க. பதவி பவரை காட்டாதீங்க. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வராக கடன் வசூல் ஆகும் நிதி நிலைமை மேம்படும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனையில் சில குழப்பங்கள் வரும். எந்த வேலையை தொடங்கினாலும் நெகட்டிவ் ஆகவே தோன்றும். பிரச்சனைகள் பெரிதாகி விடுமோ என்ற மன பயம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். கூடுமானவரை புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்கள். உங்களுக்கு எல்லாம் நன்மைதான் நடக்கும். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. கிரஹச்சார சூழ்நிலையின் மூலம் நெகட்டிவ் எண்ணங்கள் அவ்வபோது வந்து பயமுறுத்தும் அவ்வளவுதான்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டு பெண்களுக்கு உடல் அசதி இருக்கும். மாமியார் மருமகளுக்குள் இருந்த இடைவெளி நெருக்கமாக மாறும். தேவையில்லாத சண்டை சச்சரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அமையும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். சேமிப்பு கரையும். அனாவசிய செலவால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். ஆகவே வாழ்க்கைத் துணையின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்யாதீர்கள். வாழ்க்கை துணை ஒருவருக்கொருவர் பேசி அதன் பின்பு ஏதாவாக இருந்தாலும் முடிவு எடுங்கள். விவசாயிகளுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக தொடங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். வீண்விரய செலவு இருக்கும். செலவை சமாளிக்க முடியாமல் சில பேர் திண்டாடுவீர்கள். கவலைப்படாதீங்க அடுத்த வாரத்திற்குள் உங்களுடைய பணப் பிரச்சனைகள் சரியாகிவிடும். கூடுமானவரை வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

- Advertisement -