இன்றைய ராசிபலன் – 06 பிப்ரவரி 2024

Rasi-palan-new6
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சொன்ன வாக்கை நிறைவேற்றக்கூடிய நாளாக இருக்கும். காலையில் வேலைக்குப் போன உடனேயே இந்த வேலையை நான் முடிக்கிறேன் என்று சொன்னால், அந்த வேலையை நிச்சயமாக முடித்துக் கொடுத்துவிட்டு தான் வீடு திரும்புவீங்க. அந்த அளவுக்கு இன்று உங்களுக்கு கடின உழைப்பும் சாதிக்க வேண்டும் என்ற தெம்மும் இருக்கும். நல்லது நடக்கக்கூடிய நாள் இன்று.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளும் ரொம்பவும் சுலபமாக இருக்கும். உங்களுடைய அறிவாற்றல் மேலோங்கியது போல ஒரு உணர்வு, உங்களுக்கு இருக்கும். அதி புத்திசாலித்தனமாக நிறைய விஷயங்களை சிந்தித்து முடிவு எடுப்பீர்கள். அது எல்லாம் உங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் அமையும். உங்களை பார்த்து நீங்களே ஆச்சரியப்பட்டு கொள்வீர்கள் என்றால் பாருங்களேன். உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். வேறு யாரும் பாராட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் வந்து குவிய போகின்றது. நீங்கள் வேலை செய்தாலும் சரி செய்யவில்லை என்றாலும் சரி ஏதோ ஒரு வசீகரம் உங்களிடத்தில் தோன்றும். அது உங்களுடைய மேல் அதிகாரியை கவரும். உங்களை நம்பி நிறைய பொறுப்புகளை கூட ஒப்படைப்பார்கள். உயர் பதவியை சர்வசாதாரணமாக தூக்கிக் கொடுத்து விடுவார்கள். உங்களுடைய திறமைக்கு அந்த உயர் பதவி சரிசமமா என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. வரக்கூடிய வாய்ப்பை கைநழுவ விடாதீர்கள். புத்திசாலித்தனமாக நடந்துக்கோங்க. கடினமானதாக உழைத்தால் வரக்கூடிய நல்லதை தக்க வைத்துக் கொள்ளலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் வரும். இந்த வேலையை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று லேசாக ஓய்வு எடுக்க நினைத்தாலும், பிரச்சனை உங்களுக்குத்தான். இன்றைக்கான வேலையை, இன்று முடித்த பிறகு தான் அடுத்த வேலை. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். வேலை செய்யணும் வேலை செய்யணும் என்று கையில் எழுதிக் கூட வைத்துக் கொள்ளுங்கள். தவறு கிடையாது. இன்றைக்கான வேலையை முடிக்காமல் வேறு எதுவும் செய்யக்கூடாது. கவனத்தை சிதற அடிக்கக் கூடாது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்ற வேலைக்கு கிளம்புவதற்கு முன்பு ஒரு பேப்பரில் எந்தெந்த வேலையை எந்தெந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று டைம் டேபிள் போட்டுக்கோங்க. இன்று அப்படி செய்தால் மட்டும்தான் உங்களுடைய வேலையில் சிக்கல் இருக்காது. ஏனோ தானோ என வேலை செய்தால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். பிளான் பண்ணாமல் எந்த காரியத்தையும் இன்னைக்கு செய்யாதீங்க. வீட்டு பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமை மேலோங்க கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு சம்பளம் வரலாம், சில பேருக்கு வாரா கடன் தொகை வசூல் ஆகலாம். எதிர்பாராத விதத்தில் ஏதோ ஒரு தொகை வந்து உங்களுடைய பாக்கெட்டை நிரப்பும். இதனால் மனசு சந்தோஷமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலவும். மனைவி பிள்ளைகளுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை கூட வாங்கிக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. பொன் பொருள் சேர்க்கை வண்டி வாங்குவது ஏதாவது இருந்தால் அதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கப் போகின்றது. குறிப்பாக மாணவர்கள் உங்களுடைய படிப்பில் ஏதேனும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதாக இருந்தால் இன்று செய்யலாம். புதிய வேலை தேடுவது, ப்ரமோஷனுக்கு முயற்சி செய்வது போன்ற முன்னேற்றம் தரக்கூடிய காரியங்களை இன்று மேற்கொள்ளலாம். ஏதாவது கடன் பிரச்சனை இருந்தால் அதை திருப்பித் தருவதற்கு யாரிடமாவது பணம் கேட்கலாம். வங்கியில் லோன் போடலாம். இப்படிப்பட்ட நல்ல காரியங்கள் உங்களுக்கு இன்று சக்சஸ் ஆகும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று மனசு அமைதி இல்லாத சூழ்நிலையில் இருக்கும். ஏதோ ஒரு சஞ்சலம் அடி மனதில் அமர்ந்து கொண்டு உங்களுடைய வேலைகளை கெடுக்க போகின்றது. ஆகவே மனசுக்குள் ஸ்ரீ ராம ஜெயம் அல்லது ஓம் நமசிவாய மந்திரம் ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே இருங்கள். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். யாராவது வந்து உங்களை குழப்பி விடும் படி பேசினால் அதை எல்லாம் காதுல வாங்கிக்காதீங்க கடவுளை நம்புங்க நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு தற்காலிகமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகத்தான் செய்யும். பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தெம்பு உங்களிடம் இருக்கிறது. பிரச்சினைகளை கண்டு துவண்டு போய் அமர்ந்தவர்களுக்கு தோல்வி நிச்சயம். பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி ஜெயித்து விடுவோம் என்று உங்களுடைய வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டே இருங்கள். வெற்றி தானாக உங்களைத் தேடி வரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீங்க யாரிடமிருந்தும் கடன் வாங்காதீங்க. சொந்த தொழிலில் இருப்பவர்கள் முதலீட்டில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். காசு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இன்று நீங்கள் கொஞ்சம் உஷாராக இருந்தால் மட்டும்தான் ஏமாற்றத்தில் இருந்து தவிர்க்கப்படுவீர்கள். மற்றபடி வேலை வீடு எல்லாவற்றிலும் மனநிம்மதியான போக்கு நிலவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக இருக்கப் போகிறீர்கள். இனிமேல் கடன் வாங்கவே கூடாது என்ற உறுதி மொழியையும் எடுப்பீர்கள். ஆனால் உங்கள் கை சும்மா இருக்காது. ஏதாவது ஒரு வீண் செலவை தேடி ஓடத்தான் செய்யும். இழுத்துப் பிடித்து பணத்தை எடுக்க முடியாத ஒரு சேமிப்பில் முதலீடு செய்து வைத்தால் மட்டும் தான் உங்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகளால் சிக்கல் வரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் எந்தப் பிழையும் இல்லை என்றாலும் உங்களை குறை சொல்ல ஒரு மேல் அதிகாரி இருப்பார். அதை நீங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும். அதற்காக புது வேலைக்கு ஓட வேண்டும். இருக்கிற வேலையை விடனும் என்று யோசிக்காதீங்க. இக்கரைக்கு அக்கரை பச்சை. இங்கு இந்த மேனேஜர். அடுத்த இடத்தில் வேறு ஒருவர் மேனேஜராக வந்து பிரச்சனை தரத்தான் போகின்றார்கள். ஆகவே பிரச்சனையை சமாளிக்க பாருங்கள்.

- Advertisement -