இன்றைய ராசிபலன் – 06 ஏப்ரல் 2023

apr 06 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கேட்டதையெல்லாம் வாங்கி தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. பொருளாதாரம் உயர்ந்து காணப்படும். விரும்பிய விஷயங்களை அடைவீர்கள். சுய தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய அறிவுரைகளை கேட்க வேண்டிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகள் தொடர்கதை ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் லாபம் எதிர்பார்த்து அளவிற்கு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. நினைத்தது நடக்க காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கோபம் தவிர்ப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போக்குவரத்துகளில் கவனம் வேண்டும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கோபம் மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது எனவே கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய மனசாட்சியின் படி செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை சற்று அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைத்ததை சாதித்து காட்ட சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் பொழுது கண்முன் தெரியாமல் ஓட்டாதீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேண்டுதல்கள் நிறைவேற கூடிய அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி அதிகம் தேவை.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான முயற்சியால் நீங்கள் முன்னேறி காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மற்றவர்கள் முன் கம்பீரமாக இருந்து காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுய தேவைக்காக பழகுபவர்களை இனம் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் சிறு நெருக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரபலங்கள் உடைய அறிமுகம் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே கூடுதல் அக்கறை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன வாய்ப்புகளையும் தவறவிடாமல் இருப்பது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் ஓங்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இதுவரை வசூல் ஆகாத பழைய பாக்கிகள் வசூல் ஆகும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களின் ஆதரவு பெறுவீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். தேவையற்ற கடன்கள் வாங்குவதற்கு முன்பு சிந்திக்கவும். எவரிடமும் உங்களைப் பற்றிய வீண் பெருமையை பேசாதீர்கள். சுய தொழில் செய்பவர்கள் அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வம்பு, வழக்குகள் வரக்கூடும் எதிலும் அவசரப்படாதீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஓய்வு கிடைக்காமல் திணறப் போகிறீர்கள். உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை ஆராயாமல் முடிவெடுப்பது நல்லதல்ல. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது.

- Advertisement -