இன்றைய ராசிபலன் – 06 ஏப்ரல் 2024

Rasi-palan-new6
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு நிதி நிலைமை சீராகும். வாராக்கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மனைவியிடம் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் புதுசாக கற்றுக்கொண்டு அதில் திறமையாக செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சஞ்சலங்கள் வரும். அந்த சஞ்சலங்களை சரி கட்ட உங்களுடைய நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்காக ஆதரவாக இருப்பார்கள். நமக்கு பிரச்சனை என்று வந்தால் தோல் கொடுக்க நாலு பேர் இருக்காங்க அப்படின்னு மன நிம்மதியை அடையக்கூடிய நாள் இது. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுக்கவும். பொறுப்பு இல்லாமல் எந்த வேலையும் தொடாதீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பதட்டமும் இல்லாமல் இந்த நாளை கடந்து செல்லும். எந்தெந்த நேரத்துக்கு, எந்த வேலையை செய்ய வேண்டுமோ அந்தந்த நேரத்திற்கு அந்த வேலையை கரெக்டா செஞ்சு முடிப்பீங்க. உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். உறவுகளுக்குள் ஒற்றுமை நிலவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். பெயர் புகழ் பதவி அந்தஸ்து உங்களைத் தேடி வரும். அதற்கான தகுதியை வளர்க்க நீங்கள் தான் கஷ்டப்பட்டு இருப்பீர்கள். இருந்தாலும் ஜெயிக்கும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க. அதை இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள். கோர்ட் கேஸ், வழக்குகள், இழுப்பரியாக இருந்த வேலைகள் எல்லாம் இன்று உங்களுக்கு சாதகமாக முடியும். வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சண்டை போட்டு இருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். அன்பை வெளிப்படுத்துவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். குழந்தைகளுடைய பள்ளி படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். நம்பிக்கையின் பேரில் யாருக்கும் கடன் கொடுக்காதீங்க ‌

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்குவது புதிய வேலை தேடுவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் போது உங்களுக்கு சாதகமாக ரிசல்ட் வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடல் சூடு சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. குளிர்ச்சியாக பொருட்களை சாப்பிடுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நாலு பேர் மத்தியில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயர்வாக கொடுக்கப்படும். அதற்கான தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள். மாமியார் மருமகள் உறவுக்குள் இருந்து வந்த விரிசல்கள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராமல் வந்த மாற்றம் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களை எதிர்த்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதை சரி செய்யக்கூடிய திறமை உங்களிடத்தில் இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து சிந்தித்து முடிவு எடுக்கவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். அடுத்தவர்கள் மேல் அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். அதேபோல அடுத்தவர்களை கண்மூடித்தனமாக முழுசாக நம்பாதீர்கள். என்னதான் உயிர் தோழனாக இருந்தாலும் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். முடிந்தால் இன்று மாலை சிவபெருமானை தரிசனம் செய்து வாருங்கள். சிக்கல்கள் நிறைந்த குழப்பமான பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் இன்று எப்போதும் போல செல்லும். நிதி நிலைமையை சீர் செய்ய கொஞ்சம் போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும்.

- Advertisement -