இன்றைய ராசிபலன் – 06 நவம்பர் 2023

Rasi-palan-new6
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று குழப்பங்கள் இல்லாத தெளிவான மனதில் திறமையாக செயல்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுவீர்கள். நாளைக்கு வரக் கூடிய பிரச்சனைகளை இன்றைக்கு கண்டுபிடித்து, அதற்கான தீர்வையும் தேடிக் கொள்வீர்கள். அந்த அளவுக்கு திறமை வெளிப்படக்கூடிய நாள் இந்த நாள். உங்களைப் பார்த்து நீங்களே சபாஷ் சொல்லிக் கொள்வீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை நீங்கள் எதிர்பார்த்ததை விட உயர்ந்த நிலையில் இருக்கும். நிறைய பணவரவு இருக்கும். எதுவும் புரியாமல் பணத்தை வீண் விரையும் செய்யாதீர்கள். சரியான இடத்தில் முதலீடு செய்யவும். அப்படி இல்லை என்றால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்கவும். நிறைய பணத்தைப் பார்த்தவுடன் புத்தி தடுமாற்றம் ஏற்படும். சூதாட்டமோ, மற்ற குறுக்கு வழிகளை யோசிக்காதீங்க.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். பேங்க் வேலை அல்லது அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். இல்லை என்றால் கூட்ட நெரிசலில் சிக்கி சோர்ந்து போவீர்கள். உங்களுடைய அன்றாட வேலைகளை கொஞ்சம் கவனத்தோடு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு சேர்த்து, உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்ததை விட ரொம்ப ரொம்ப ஈஸியா நேரம் போகும். எந்த சிரமமும் இருக்காது.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வார தொடக்கம் மிக மிக அற்புதமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை தொடங்குவீர்கள். தீபாவளிக்கு தேவையான பிளான்களை பக்காவா போடுவீங்க. தீபாவளி நிறைவாக கொண்டாடுவீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எந்த பிரச்சனையும் இருக்காது. அப்படியே பிரச்சனை வந்தாலும் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். தானா வந்த பிரச்சனை தானாக சரியாகும். விட்டுவிடுங்கள், இன்று உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைத்து வருபவர்கள் கூட, நல்லது செய்துவிட்டு செல்வார்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றக்கூடிய நேரமும் காலமும் உங்களுக்கு இருக்குது. சந்தோஷமா இருங்க.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு வேலையையும் அலட்சியமாக செய்யக்கூடாது. பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க. உங்களுக்கு நீங்களே ஒரு கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளுங்கள். அடுத்தவர்கள் உங்களை குறை கூறும் படி நடந்து கொள்ளாதீர்கள். பிடிவாதம் பிடிக்காதீர்கள். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடந்தால் என்று நன்மை நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ஒரு நிலையாக இருக்காது. இதை செய்யலாமா அதை செய்யலாமா என்று அலைபாய்ந்து கொண்டே இருக்கும். ஒரு வேலையையும் உருப்படியாக செய்ய மாட்டீங்க. அதனால புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவும். முன்பின் தெரியாத மனிதர்களின் பேச்சு நஷ்டத்தை கொடுத்து விடும் ஜாக்கிரதை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அலுவலகத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. முடியாதவர்கள் வீட்டிலேயே இருங்க. ஆபீசுக்கு லீவு போடுங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நல்லபடியாக நடக்கும். மனசு சந்தோஷமடையும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். சுகமாக தொடங்கக்கூடிய இந்த நாள் இறுதியில் கடவுளுக்கு நன்றியை சொல்லுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை முடிந்து, திங்கட்கிழமை தொடங்குவதில் உடல் சோர்வு இருக்கும். இந்த வாரத்தை எப்படி கடந்து செல்ல போகின்றோமோ, என்று யோசிப்பீங்க. ஆனா அதையெல்லாம் எந்த கஷ்டமும் இருக்காது. தானாக நகர்ந்து செல்லும். மனசு தான் எதையோ இழந்தது போல இருக்கும். எல்லா சந்தோஷமும் இருந்தும் இல்லாத நிலை உங்களுக்கு. இன்றைய நாள் முழுவதும் அப்படியே கனவில் மிதப்பீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வாரத் தொடக்கத்திலேயே ஆர்டர்கள் வந்து குவியும். டார்கெட் உள்ளவர்களுக்கு லக்கியான நாள்தான் இன்று. சில பேருக்கு பண பற்றாக்குறையால் கவலை இருக்கும். தீபாவளிக்கு எப்படி பட்டாசு வாங்குவது, புத்தாடை வாங்குவது என்று யோசனை சிந்தனை இருக்கும். கவலைப்படாதீங்க சீக்கிரமே பண பிரச்சனை சரியாகிவிடும்.

- Advertisement -