இன்றைய ராசிபலன் – 07 ஜனவரி 2024

Rasi-palan-new7
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நழுவ விடாதீர்கள். வெற்றியோ தோல்வியோ முயற்சி செய்து பார்ப்பது உங்களுடைய கடமை. நல்லதே நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சோம்பேறித்தனத்தோடு இருக்காதீங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாள். இத்தனை நாள் வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். தொழிலை விரிவு படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்யலாம் நல்லதே நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக் கூடிய நாளாக அமையும். விடுமுறை நாள் என்பதால் சிலர் வீட்டை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வண்டியை பழுது பார்ப்பது வீட்டில் போனது வந்ததை சரி செய்வது போன்ற நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மதியம் நல்ல சாப்பாடு நல்ல உறக்கம் இருக்கும். இந்த நாள் சந்தோஷமாக நகர்ந்து செல்லும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கஷ்டங்கள் தீரும் நாளாக அமையும். மனதில் இத்தனை நாள் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த விஷயங்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்களின் அருமை பெருமைகளை புரிந்து கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். வீண் செலவை குறைத்துக் கொள்ளவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்தவும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்கள் வேலையை செய்ய தொடங்குவீர்கள். சில பேர் பொங்கல் பர்சேஸுக்கு ஷாப்பிங் செய்ய கிளம்புவீர்கள். கையில் இருக்கும் பைசா செலவாகும். கவலைப்படாதீங்க வேறு என்ன செய்வது. பண்டிகை நாள் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவும். இந்த நாள் இனிமையான நாளாக அமைவதோடு சேர்த்து இன்பமான சர்ப்ரைஸும் கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் பயந்த உணர்வோடு இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவு பிறக்காது. ஏதாவது பிரச்சனையாகி விடுமோ என்று பயந்து பயந்து இந்த நாளை கடக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படாதீங்க இன்று நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள் உங்கள் பக்கம் தவறு இல்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. வேலை தொழில் எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். பொய் பேசாதீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கவன குறைவாக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். அடம் பிடிக்கக் கூடாது. குறிப்பாக டீன் ஏஜ் வயதை உடையவர்கள் இன்று ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்பின் தெரியாத நபர் யாராவது வந்து உங்களிடம் பேசினால் அஜாக்கிரதையாக இருக்காதீங்க. ஜாக்கிரதையாக பேசுங்க. குறிப்பாக எதிர்பாலின நட்பு கூடவே கூடாது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக அமையும். விடுமுறை நாள் தான். இருந்தாலும் வீட்டு வேலைகளை கூட சில பெண்களால் சரியாக செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். கூடவே சேர்ந்து உடல் அசதியும் காணப்படும். இந்த சண்டே கொஞ்சம் கொலாப்ஸ் ஆன சண்டே ஆகத்தான் செல்லும். இருந்தாலும் இன்று மாலை உங்கள் மனது சந்தோஷம் படியான தருணங்கள் வர வாய்ப்பு உள்ளது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். விவசாயத் தொழிலில் நல்லது நடக்கும். சின்ன சின்ன வியாபாரிகள் கூட இன்று அதிக லாபத்தை காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் குவியும். எதிரிகளை துவம்சம் செய்வீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைக்கு சுலபமாக தீர்வு தரும் அளவுக்கு உங்களுடைய புத்தி கூர்மை இருக்கும். ப்ரோமோஷனுக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பேச்சாளர்களுக்கு இன்று பெரிய அளவில் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் வெற்றி காணக்கூடிய நாள் இது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசு சோர்வாக இருக்கும். நிதி பற்றாக்குறை உண்டாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் இருக்கும் வண்டி வாகனம் அல்லது ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்து செலவு வைக்கும். சேமிப்பு கரைய கரைய கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். கவலைப்படாதீங்க, வீண் விரைய நேரம் வந்தால் வேறு வழி கிடையாது. அதை செய்து தான் ஆக வேண்டும். கூடுமானவரை ஆடம்பர செலவை குறைக்க பாருங்க.

மீனம்


இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுக்கு மட்டும் வேலை பளு அதிகமாக இருக்கும். கொஞ்சம் டென்ஷனான நாளாகத்தான் இந்த ஞாயிற்றுக்கிழமை கடந்து செல்ல போகின்றது. டென்ஷனை குறைக்க மனதை ரிலாக்ஸ் செய்ய மனதுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வேலை, நம்முடைய கடமை, என்று இருக்கின்ற வேலையை பொறுமையோடு செய்து முடியுங்கள். இந்த நாள் இறுதியில் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

- Advertisement -