இன்றைய ராசிபலன் – 07 மார்ச் 2024

Rasi-palan-new7
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலைகளை ரொம்பவும் ஆர்வமாக செய்வீர்கள். புதுசாக ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும். அந்த எண்ணமே வாழ்க்கையில் உங்களை உயர்த்தி விடும். உங்களை பார்த்து ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஆழமாக பதியப் போகின்றது. இதனால் உற்சாகமாக செயல்படுவீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன வேலையில் கூட அக்கறையோடு ஈடுபட வேண்டும். கவனக்குறைவாக செய்யக்கூடிய வேலைகள் முழு வெற்றியை கொடுக்காது. அது மட்டும் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் வாங்கவும் வாய்ப்புகளை தந்துவிடும். உஷாரா இருந்துக்கோங்க. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். முதலாளியாக மட்டும் நடந்து கொள்ளாமல், வேலையில் இறங்கி பார்த்து செய்வது தான் நன்மையை தரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும் எடுத்துறிந்து பேசக்கூடாது. அடுத்தவர்களை மரியாதை இல்லாமல் நடத்தக்கூடாது. உறவுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். எப்போதுமே வேலையில் டென்சனோடு வீட்டுக்கு வராதீங்க. மனைவியுடன் ஆசையாக இரண்டு வார்த்தை பேசுவது நல்லது. அதேபோல மனைவி கணவரிடம் எரிச்சலோடு பேசக்கூடாது. அனுசரணையாக இருக்கவும். இல்லையென்றால் குடும்பத்தில் சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய நம்பிக்கை பல விதத்தில் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டை பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் இருந்து வந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிரிகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எதற்கும் பயப்படாமல் செயல்படுங்கள். பயந்து ஒரு அடி காலை பின்னுக்கு எடுத்து வைத்தாலும் கூட முடிந்தது. வாய்ப்புகள் கைநழுவி போக கூடும் பாத்துக்கோங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் கொஞ்சம் சரியாக ஓடாது. ஏதோ ஒரு பின் தங்கிய சூழ்நிலையிலேயே இருப்பீர்கள். மனசு ஒரு நிலையாக இருக்காது. முதலில் மனதை ஒருநிலைப்படுத்தி வேலை செய்யவும். அப்போதுதான் வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். மனதை அலைபாய விடாதீர்கள். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்களும் விலகும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருக்கும். சாமியே கும்பிடாதவங்க கோவிலுக்கே போகாதவங்க கூட, இன்னைக்கு கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவிங்க. இதனால் உங்களுக்கு மன நிம்மதியும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் இந்த நாள் இறுதியில் சரி செய்து விடுவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான விஷயங்களை செய்யப் போகிறீர்கள். எல்லா வேலையிலும் சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் கிடைக்கும். அந்த உதவி உங்களுக்கு மன நிம்மதியையும் கொடுக்கும். சிலருக்கு வேலை பளு அதிகமாக இருக்கும் காரணத்தால் இன்று மாலை உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நிறைய தண்ணீர் குடிங்க. ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்.

விருச்சிகம்


விருராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாளாக அமையும். இதுநாள் வரை உங்களை ஏளனமாக பேசியவர்கள் வாயால், உங்களை வாழ்த்த போகிறார்கள். இதனால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டைகள் சரியாகும். மனைவியிடம் மனம் விட்டு பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமா இருங்க. மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை காட்டவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எப்பவும் உங்களை சுற்றி இருப்பவர்களை சமாளிக்கவே நேரம் போதாது. உங்களையும் சரியாக வேலை செய்ய விட மாட்டார்கள். அவர்களும் அவர்களுடைய வேலையை பார்க்க மாட்டார்கள். வெட்டி கதை அடிக்கும் எதிராளியின் சூழ்ச்சியிலிருந்து தப்பித்து தூரமா ஓடிப் போயிருங்க. அப்பதான் இன்றைய நாள் ஒழுங்காக நகர்ந்து செல்லும். இல்லை என்றால் உங்களுடைய வேலையும் கெடும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். எந்த வேலையை செய்தாலும் ஒரு பதட்டத்தோடு இருப்பீர்கள். பதட்டம் காரணமாக வேலையில் தவறுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் வியாபாரத்தில் பதற்றத்தோடு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அனாவசியமாக அடுத்தவர்கள் மீது சந்தேகம் பட்டும் இன்று பேசக்கூடாது. கொஞ்சம் பொறுமையாக இருங்க, பிரச்சனை என்றால் அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எடுங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஏதாவது ஒரு விதத்தில் பகை உண்டாகும். நண்பர்களை கூட பகைத்துக் கொள்ளும் அளவுக்கு உங்களுடைய நடவடிக்கைகள் இருக்கும். சும்மாவே அடுத்தவங்களை திட்டாதீங்க. முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்குது என்று எண்ணிப் பார்க்கவும். உங்களுடைய குணாதிசயத்தை மாற்றிக் கொண்டால் இன்று நல்லது நடக்கும். எப்போதும் எரிச்சலோடு தான் இருப்பேன் என்றால் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த டென்ஷன் இன்று கொஞ்சம் குறையும். வேலையில் இருந்து வந்த சிரமங்களும் குறையும். சுலபமாக இந்த நாளை கடந்த செல்வீர்கள். கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மனசு ரீதியாக சில அழுத்தம் உங்களுக்கு இருந்திருக்கும். அழுத்தம் கொடுத்து வந்த பிரச்சனைகள் இன்று கொஞ்சம் சரியாகும். ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க. கொஞ்சம் பெரு மூச்சு விடுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

- Advertisement -