இன்றைய ராசிபலன் – 07 ஏப்ரல் 2023

7 april
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மதிப்பு கூடும். அரசு பணியில் இருப்பவர்கள் அனுகூலங்களை பெறுவார்கள். தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு எதிர்பாரா பண வரவு ஏற்படும். சொத்து விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினக்கு இன்றைய தினம் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். நினைத்தது நிறைவேறும். பணியிடங்களில் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். எதிலும் தைரியமாக ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் புத்துணர்ச்சி அளிக்கும். புதியவற்றில் ஈடுபட்டு வெற்றிகளை காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் நிம்மதியான நாளாக இருக்கும். குடும்ப உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் அலைச்சல் நிறைந்ததாக இருக்கும். வீட்டிற்கான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். ஒரு சிலருக்கு மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபமே இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும். பணம் சம்பந்தமான விடயங்களில் எச்சரிக்கை தேவை. உறவுகளிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அன்னிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கும். சிலர் பணம் கேட்டு உங்களை நச்சரிப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. பணியிடங்களில் சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதையும் சாதிக்கின்ற நாளாக அமையும். விலகி சென்ற சொந்தங்கள் தேடி வருவார்கள். சிலர் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவார்கள். தனவரவு கிருத்திகரமாக இருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்கள் தடங்கல் இன்றி நடக்கும். சிலருக்கு எதிர்பாராத உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கும். தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனங்களில் வேகமாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும். பிறருக்கு ஜாமின் கையெழுத்து போடக்கூடாது. சிலருக்கு மன உளைச்சல் அதிகரிக்க கூடும்.

- Advertisement -