இன்றைய ராசிபலன் – 07 ஏப்ரல் 2024

Rasi-palan-new7
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய சவாலான வேலையை உங்களிடம் கொடுத்தாலும் அதை சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். அந்த அளவுவுக்கு சூப்பராக உங்களுடைய மூளையும் வேலை செய்யப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். உற்சாகம் இருக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு பலம் பெறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகள் வரும். ஆனால் அந்த பிரச்சனையை சரி செய்ய உங்களுடைய உறவுகள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களது நல்ல மனதை பற்றி நன்றாக புரிந்து கொள்வீர்கள். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் இது நாள் வரை ஏமாளியாக இருந்தவர்கள் கூட இனி வரக்கூடிய காலகட்டத்தில் கண் விழித்துக் கொள்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வான இடத்திற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வேலை செய்யும் இடத்தில் புது வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் புது உறவுகள் வரும். நாலு பேர் மத்தியில் உங்களுக்கான மரியாதை நல்லபடியாக கிடைக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கூடுமானவரை அதிகமான வெயிலில், வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று ஓய்வு எடுக்கக் கூடிய நாளாக இருக்கப் போகின்றது. தேவையில்லாத டென்ஷனை எல்லாம் தூக்கி தூர வைத்து விட்டு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு இன்று கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். அதை எல்லாம் முடித்துவிட்டு மாலை நேரம் சந்தோஷமாக வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கழிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைகளை யாரிடம் சொல்லி அழுவது என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். ஆதரவாக யாராவது ஒரு வார்த்தை பேசினாலும் அது உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். மனதிற்கு பிடித்த நபரால் நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். புகழ்ச்சிக்கு அளவே இருக்காது. மனது நிரம்ப சந்தோஷம் இருக்கும். தொழிலில் பாட்னரிடம் கவனமாக பழகுங்கள். கணக்கு வழக்குகளை கொஞ்சம் நீங்களும் சரி பாருங்கள். ஏமாளியாக இருக்காதீர்கள். எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காதீங்க. நீங்களும் சாட்சி கையெழுத்து போடாதீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். கடனையெல்லாம் அடைக்க கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் உண்டாகும். மன நிம்மதி பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கம் வரும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். இன்று நல்ல சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடுக்க போறீங்க. சந்தோஷமான இந்த நாளில் குல தெய்வத்திற்கு நன்றி சொல்லுங்க.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்தையும் டென்சனோடு பார்ப்பீங்க. தலைவலி வரும். பிளட் பிரஷர் ஏறும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள மனதிற்கு பிடித்த பாடலை கேட்கவும். உங்க மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்க. ரிலாக்ஸ் ஆன பிறகு வேலையை தொடங்கலாம். அவசரத்தோடு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பம்பரம் போல எல்லா வேலையும் முடிச்சிடுங்க. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பெரியவர்களின் அனுசரணையான பேச்சு ஆதரவாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்தால் அனுசரித்து செல்லவும். பெண்கள் இன்று முன்கோபடாமல் இருப்பது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத பிரச்சினைகள் வீடு தேடி வரும். முடிந்தால் உங்கள் கைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள். நிம்மதியாக இருப்பீங்க. தேவையில்லாத மூன்றாவது நபர் பஞ்சாயத்துக்கு போக வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்றைய நாள் சுமூகமாக செல்லும். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடக்கவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் தேவையில்லாத விஷயத்தில் இன்று தலையிடக்கூடாது. பெற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். செலவை குறைக்க வேண்டும். சேமிப்பை உயர்த்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணை தேவை. பிரச்சனையை விரைவாக முடிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் போகாதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகளை எல்லாம் சரி கட்டுவீர்கள். குறிப்பாக உங்கள் கடன் பிரச்சனையை தீர்க்க இன்று நேரம் காலம் கூடி வரும். வேலை செய்யும் இடத்தில் ஓரளவுக்கு நிம்மதியான போக்கே நிலவும். இருந்தாலும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள். எல்லா விஷயத்தையும் எல்லாரிடமும் சொல்லக்கூடிய பழக்கத்தை நீங்கள் நிறுத்திக் கொண்டால் உங்களுக்கு நிச்சயம் நன்மை நடக்கும்.

- Advertisement -