இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2022

today rasi palan 07/08/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதம் நடக்கும். கவலைகள் எல்லாம் ஒழிந்து போகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விட்டுப் போன பொருட்கள் வந்து சேரும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் தீரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் ரீதியான நோய்கள் நீங்கும். மனதை அலைபாய விடாமல் மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும் யோகம் உண்டு.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தங்கு தடை இல்லாத வெற்றியை காணலாம். சுப காரிய முயற்சியில் இடையூறுகள் இல்லாமல் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனக்குறை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அது வந்த வேகத்தில் விலகிச் செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் எண்ணம் அதிகரிக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. சகல விதமான காரியங்களும் உங்கள் சக்திக்கு மீறிய சாதகப் பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குலதெய்வ வழிபாடு அவசியமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் வெளியிட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பகை வளர காரணமாக அமைவீர்கள் கவனம் தேவை. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் நல்லதை சொன்னாலும், தீமையாக முடியும் கவனம் தேவை.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியம் தடங்கல் ஆகாமல் இருக்க விநாயகரை வழிபடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மலை போல் வந்த கஷ்டமும் பனி போல் விலகும் கவலை கொள்ள தேவையில்லை.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகள் சாதகமாகும் இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை அடைய சற்று சோம்பல் படாமல் இருப்பது நல்லது. நண்பர்கள் மூலம் கவலைகள் வரக்கூடும் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு துணிச்சலான காரியங்களை செய்வீர்கள். பல விதங்களில் லாபம் வந்து சேரும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு தயக்கமும் காட்டாமல் உள்ளதை உள்ளபடி பேசிக் கொள்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் வளர்ச்சியை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்பின் தெரியாதவர்களின் பேச்சைக் கேட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் அற்புதமான வாய்ப்புகள் உண்டாக கூடிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு இடையே விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் யோகம் உண்டு. சுய தொழிலில் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் தேவை.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கலகங்கள் நிறைந்த நாளாக இருக்க வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடைமை மீது கவனம் தேவை பொருள் இழப்பு ஏற்படலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தீய நட்பிடம் இருந்து விலகுவது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற கோபம் தேவையற்ற நஷ்டத்தை கொடுக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே புதிதாக எவரையும் நம்பாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. செய்த சேமிப்பு வீண் விரயமாகலாம் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களும் பகைவர்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு கூடும்.

- Advertisement -