இன்றைய ராசிபலன் – 07 நவம்பர் 2023

Rasi-palan-new7
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். வசூல் ஆகாத கடன் தொகை வசூல் ஆகலாம் அல்லது வராத சம்பளம் கைக்கு வரும். வராத போனஸ் கைக்கு வரும். அல்லது உறவினர்கள் யாராவது உங்களை ஆசீர்வாதம் பண்ணி உங்களுக்கு காசு கொடுப்பாங்க. ஆக மொத்தம் பணத்தால் இன்றைய நாள் உங்களுக்கு லாபம் இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கும் இன்று ஜாக்பாட் அடிக்கப்போகுது. மனசுக்கு பிடிச்ச நபரை சந்திப்பீங்க. மனசுக்கு பிடிச்சா நிறைய நல்ல சம்பவம் நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். முன்கூட்டியே சில வேலையை முடிக்க கூடிய கட்டளையை மேலதிகாரிகள் உங்கள் தலைமேல் இறக்கி வைப்பார்கள். அதனால் கொஞ்சம் கஷ்டம் இருக்கும். ஆனால் பிரச்சனை இருக்காது. சிரமம் பார்க்காமல் சோம்பேறித்தனம் பார்க்காமல் வேலை செய்தால் நல்லது நடக்கும். இன்று உங்களால் முடிந்த உதவியை நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்து மன மகிழ்ச்சியை பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நல்ல வரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். முன் கோபப்படாதீங்க. உறவினர்கள் யாராவது சண்டை போட்டாலும் நீங்கள் விட்டுக் கொடுத்து பேசிடுங்க. அப்போதுதானே குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனத்தோடு இருக்கணும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சார்ந்த உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றபடி செய்யும் வேலை வியாபாரம் எல்லாவற்றிலும் சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத நீங்க கொடுக்கும் தீபாவளி பரிசு வாழ்க்கை துணைக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனசுக்கு பிடிச்ச விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு பிடித்த தீபாவளி துணியை எடுத்துப்பீங்க. சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். எதிரிகள் கூட நண்பர்களைப் போல வந்து பேசுவார்கள். யாரிடமும் சண்டை போடாதீங்க. வாக்குவாதம் செய்யாதீங்க. பொறுமையாக இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு சூப்பரா இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால் உங்கள் மனசு தாங்காது. போய் உதவி செய்வீங்க. ஆனா உதவி செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் நல்லதை செய்தாலும் உங்களை இன்று நாலு பேர் திட்ட தான் செய்வார்கள். கவலைப்படாதீங்க, நன்மை செய்பவர்களுக்கு நிச்சயம் அந்த கடவுள் நன்மையைத்தான் செய்வான். அதில் இந்த சந்தேகமும் கிடையாது. செலவை கொஞ்சம் குறைக்கணும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கணும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத நபரின் உதவியால் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதன் மூலம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமானம் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களை மேலதிகாரிகள் ஆதரிப்பார்கள். நீங்கள் செய்யக்கூடிய வேலைகளுக்கு உண்டான பாராட்டும் ஊதியமும் சரியாக வந்து சேரும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உடம்பில் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் இருக்கும். குழந்தைகளோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். மாமியார் வழி உறவின் மூலம் நல்லது நடக்கும். வியாபாரத்தில் சில பேர் உங்களை டென்ஷன் செய்வாங்க அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையை மட்டும் பாருங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனிதர்களால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு பிடிக்காதவங்க உங்களுக்கு தேவை இல்லாத நண்பர்கள் உறவுகள் எல்லாம் வலிய வந்து பிரச்சனை செய்வார்கள். அதை கண்டு கொள்ளாதீர்கள். அவர்களின் மீது கோபப்படாதீங்க. பேசினால் பேசிட்டு போகட்டும்னு விட்டுடுங்க. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள மனசுக்குள் ஓம் நமசிவாய சொல்லிக்கோங்க எல்லாம் சரியாகிவிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புதிய நண்பர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அட்வைஸ் செய்வாங்க. அது நல்லதுக்கா, கேட்டதுக்கா என்று யோசித்து முடிவு எடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. சண்டையை பெருசாக்க கூடாது என்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கணும் குழந்தைகளுக்காகவாவது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கசப்பான சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எல்லா மனிதர்களிடமும் ஜாக்கிரதையாக பேசுங்கள். வார்த்தையில் கவனம் தேவை. அடுத்தவர்கள் உங்களை உதாசீனப்படுத்தினாலும், பதிலுக்கு நீங்கள் கோபப்படக்கூடாது. அமைதியா காதில் வாங்கிட்டு வந்துடுங்க. தவறு யார் மேல் இருந்தாலும் சரி நீங்கள் இன்று அமைதி காப்பது தான் நல்லது. ஒருவேளை தவறு உங்கள் பக்கம் இருந்தால் அதை திருத்திக் கொள்ளுங்கள். பிரச்சனை சரியாகிவிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். பணக்கஷ்டம் சில பேருக்கு சரியாகிவிடும். தீபாவளிக்கு தேவையான ஷாப்பிங் முடிப்பீங்க. குழந்தைகளையும் மனைவியையும் சந்தோஷப்படுத்தி பாப்பீங்க. சில பேருக்கு கையில் காசு இருக்காது. அதை நினைத்து வருத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த உலகத்தின் மேலேயே உங்களுக்கு கோபம் வரும். கவலைப்படாதீங்க சீக்கிரம் நல்லது நடக்கும்.

- Advertisement -