இன்றைய ராசிபலன் (07 டிசம்பர் 2021)

rasi-palan-07/12/21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சுயதொழில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதம் நிறைந்த நாளாக அமையும் இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுயதொழில் எதிர்பார்ப்பதை விட சிறந்த லாபம் காணலாம். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி இருக்கும். பொருளாதாரம் மேம்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் உண்டாகும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சிக்கனம் தேவை.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கருணை அதிகரித்து காணப்படும். மச்சான் மீது இருக்கும் இரக்க சுபாவம் உங்களை மேலும் மேன்மையடைய செய்யும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் பணியில் கூடுதல் அக்கறை தேவை. கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் மேலும் வலுவாக என்பதால் கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. சீ தலையில் மந்த நிலை காணப்படும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. சுய தொழிலில் இருப்பவர்கள் அதிக வாடிக்கையாளர்களை கவர்வதில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைகள் படிப்படியாக தீரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்து காணப்பட கூடிய நல்ல நாளாக இருக்கும். சுயதொழிலில் இருப்பவராக இருக்க தங்கள் பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை கவனிப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த அமைதி நீடிக்கும். பொருளாதார ரீதியான ஏற்றம் காணப் படுவதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொழில் ரீதியான பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரியும். ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் அக்கறை கொள்வது நல்லது.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கான விடை கிடைக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்களை மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். உத்யோகத்தில் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி காணலாம். ஆரோக்கிய ரீதியான குறைகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.

- Advertisement -