இன்றைய ராசிபலன் – 08 ஜனவரி 2024

Rasi-palan-new8
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். காரணமே இல்லாத மன பயத்தால் சில தவறுகளை செய்து விடுவீர்கள். உங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்றால் பதட்டப்பட வேண்டாம். தைரியமாக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். மனசை லேசாக வச்சுக்கோங்க. இறைவனின் அருளாசி உங்களுக்கு இருக்கிறது. கிரஹ சூழ்நிலையால் மன அழுத்தம் ஏற்படும். மற்றபடி சொல்லும் அளவுக்கு பெரிய பிரச்சனைகள் இருக்காது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்களை தவறாகவே புரிந்து கொண்டிருந்த நண்பர்கள் இன்று, சரியாகப் புரிந்து கொள்வார்கள். இதனால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நல்லது நடக்கக்கூடிய இந்த நாளில் வருமானமும் அதிகமாக இருக்கும். பொங்கல் செலவை சமாளிக்க தேவையான தெம்பு கிடைத்து விடும். வியாபாரத்தில் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். இதனாலேயே சில பேருக்கு எரிச்சல் உண்டாகும். நிம்மதியான சூழ்நிலை இருக்காது. ஆனாலும் உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை. பிரச்சனைகளை சரி செய்ய அவசரப்படாதீங்க. பொறுமையா இருங்க. இன்று வேகத்தை விட விவேகமாக நடப்பது நல்லது. பண விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் அக்கறை இருக்க வேண்டும். வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. நேரத்திற்கு சரியாக பிளான் செய்து வேலையை செய்யுங்கள். அப்போதுதான் இந்த வாரம் உங்களுக்கு சுமுகமாக செல்லும். வாரத்தின் தொடக்க நாளை சோம்பேறித்தனத்தோடு உட்கார்ந்தால், அடுத்த அடுத்த நாள் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள் ஜாக்கிரதை.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களில் சில பேருக்கு இன்று தனிமை நிறைய பாடங்களை சொல்லிக் கொடுக்கும். பழைய நினைவுகள் வரும். நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றினால் உடனே மனதில் உள்ளதை வெளிப்படையாக செய்யுங்கள். நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் முதலீட்டை கவனமாக செலுத்தவும். மற்றபடி பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் கடந்து போகக்கூடிய நாளாக இருக்கும். மன நிம்மதி பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் சந்தோஷமாக உங்களுடைய வேலையை தொடங்குவீர்கள். வார தொடக்க நாளே இன்று உங்களுக்கு அமோகமாக இருக்கப் போகின்றது. கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்ற தொலைநோக்கு பார்வையோடு சிந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை இன்றே செய்து வைப்பீர்கள். புதிய முதலீடுகள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து நல்ல முடிவை எடுக்கக்கூடிய நல்ல நேரம் வந்திருக்கிறது. எல்.ஐ.சி போடுவது, வங்கியில் கணக்கு தொடங்குவது, போன்ற நல்ல காரியங்களை இன்று தொடங்கலாம். நகை சீட்டு கட்டுவது போன்ற காரியங்களை பெண் பிள்ளைகளுக்கு செய்தால் அதிலும் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்கள். நீங்கள் பாட்டுக்கு உங்களுடைய வேலையை செய்து கொண்டே இருப்பார்கள். எதிரிகள் உங்களிடம் பேசி சோர்ந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு காது கேட்டாலும், அது கேட்காதது மாதிரி தான். வாய் பேசினாலும் ஊமையாகத்தான் இருப்பீர்கள். உங்களை ஆட்டி அசைக்க இன்று யாருக்கும் தெம்பு இருக்காது. பிடிவாத குணத்தில் ஒற்றைக்காலில் நின்று எல்லா விஷயத்தையும் சாதிக்க போறீங்க பாத்துக்கோங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். காதல் கைகூடும். காதல் திருமணம் வரை செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்கள் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படாதீங்க. வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கூடுமானவரை யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் என்று தலை நிமிர்ந்து நடக்கும் அளவுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களை பார்த்து ஏளனமாக பேசியவர்கள் முன்னால் வாழ்க்கையில் உயர்ந்து நிற்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்திருக்கும். சவால்களில் வெற்றி காண்பீர்கள். விரோதிகள் முகத்தில் கறியை பூசுவீர்கள். உற்சாகம் நிறைந்த இந்த நாளில் வருமானத்திற்கும் பிரச்சனை இருக்காது. கடன் பிரச்சனையையும் படிப்படியாக திருப்பிக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் வந்துவிடும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக அமையும். மாமனார் வழி உறவினால் சந்தோஷமான செய்தி செவிகளை எட்டும். சில பேருக்கு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடும். புதிய சொத்து வாங்கக் கூடிய யோகமும் இருக்கிறது. வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். பழுதுபார்க்கும் செலவு கொஞ்சம் கையை கடிக்கும். விரைய செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

மீனம்


மீனம் ராசிக்கு இன்றைய நாள் காலை முதலிலிருந்து உற்சாகமாக தொடங்கிவிடும். மாலை கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே காலையும் மதியமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இரவு நேரத்தோடு வீட்டுக்கு போங்க. நிதி நிலைமை சில பேருக்கு கொஞ்சம் மோசமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாழ்க்கை துணையிடம் உங்களுடைய ஈகோ பிரச்சனையை காண்பிக்காதீங்க. விட்டுக் கொடுத்து நடந்தால் நல்லது நடக்கும்.

- Advertisement -