இன்றைய ராசிபலன் – 08 பிப்ரவரி 2024

Rasi-palan-new8
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீங்க. அலுவலகப் பணியில் அமைதி காக்கவும். யார் கை நீட்டி உங்களை குறை சொன்னாலும் பதிலுக்கு நீங்க பேசக்கூடாது. உங்களுடைய திறமையை வேலையில் காட்டுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலக பணியில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். தொழிலில் நீங்கள் எதிர்கொண்ட பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கூட சாதாரணமாக தீர்வு கிடைத்துவிடும். கோர்ட் கேஸ் வழக்குகள், இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். சில வேலைகள் கையில் எடுத்தவுடன் முடியாது. இந்த இடத்துக்கு போங்க, அந்த இடத்துக்கு போங்க அப்படின்னு உங்களை இழுத்து அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதற்காக அவசியமாக செய்ய வேண்டிய வேலைகளை தள்ளி போட முடியாது அல்லவா. காரிய தடை விலக இன்று காலையிலேயே அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு பிறகு முக்கியமான வேலைகளை செய்யுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வளவு நாள் வேலை செய்தாலும் ஒரு மனநிறைவு இருக்காது. திருப்தி இல்லாத சூழ்நிலை நிலவும். அதனால் செய்த வேலையையே திருப்பி திருப்பி செய்ய வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். கூடுமானவரை புதிய முயற்சிகளை நாடி தள்ளி போடுங்க. இன்று கொஞ்சம் வீண் விரைய செலவுகள் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக மருத்துவமனை செல்ல வேண்டிய சூழல் சில பேருக்கு உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்மறையான சிந்தனைகள் எழும். ஒரு நல்ல விசேஷத்துக்கு கூட போக முடியாது. வீட்டில் சுப காரிய பேச்சுக்களை நடத்த முடியாதபடி தடை இருக்கும். ஆகவே இன்று நீங்கள் உங்களுடைய மனதை இறை வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். ஸ்ரீ ராமஜெயம், ஓம் நமசிவாய இப்படிப்பட்ட மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருங்கள். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் பையை நிரப்பும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களைத் தொடரும் பிரச்சனை, இன்று உங்களை விட்டு விலகப் போகிறது. அது எதிரி பிரச்சினையாக இருக்கலாம். அல்லது சொந்த பந்தங்கள் பிரச்சனை அல்லது வேலையில் யாராவது உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்திருந்தாலும் சரி, அந்த தொல்லையில் இருந்து இன்று நிரந்தர விடுதலை அடைவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. காலையில் கொஞ்சம் மந்தமாக தான் உங்களுடைய நாள் தொடங்கும். ஆனால் போகப் போக சுறுசுறுப்பாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்கவும். குடும்ப பிரச்சனைகளை தெரியாத மூன்றாவது நபர்களிடம் சொல்லாதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் நல்லபடியாக முடிவது போல இருந்தாலும், இறுதியில் ஏதாவது ஒரு சொதப்பல் செய்யப் போறீங்க. ஆகவே முக்கியமான வேலைகளில் கூடுதலாக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களின் நம்பி ஒப்படைக்காதீங்க. எதுவாக இருந்தாலும் நீங்களே இருந்து அந்த வேலையை செஞ்சு முடிச்சிடுங்க. கவன குறைவின் காரணமாக பிறகு பிரச்சனைகள் வரும்போது அடுத்தவர்களை கை நீட்டி குறை சொல்லக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் பக்காவா பிளான் பண்ணி பண்ண போறீங்க. உங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைத்த எதிரிகள் கூட, உங்களைப் பார்த்து நடுங்கி பின்னுக்கு போவார்கள். அந்த அளவுக்கு திறமை வெளிப்படும். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். சில பேருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வும் கிடைக்கும். வரக்கூடிய வாய்ப்பை தவற விடாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். மனசுக்கு பிடித்தவர்களுடைய சந்திப்பு உங்களை நிம்மதிப்படுத்தும். வீட்டில் சுப காரியம் தடை விலகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்தோடு இருங்க. அனாவசியமாக அடுத்தவர்களை திட்டி கமெண்ட் பண்ணாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது தெரியாது. வேலையிலும் சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும். மேலதிகாரிகள் சொல்வதை பொறுமையாக காதில் வாங்கிக் கொள்ளவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருங்க. செலவை குறைக்கவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகப் பணி இருக்க கூடிய நாள்தான். இருந்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் பிரஷர் இருக்காது பார்த்துக்கோங்க. உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடவும். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

- Advertisement -