இன்றைய ராசிபலன் – 8 ஏப்ரல் 2023

apr 08 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எண்ணியதை அடைவதற்கு காலதாமதம் ஆகலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நீடிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு தட்டும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது எண்ணியபடியே ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் அவிழும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கை நிறைய பணம் புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடையில்லாத வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீராத வேண்டுதல்கள் தீரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உரிமைகளை எதற்காகவும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பான அமைப்பாக காணப்படுகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனதை அலைபாய விடாதீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகளும் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் காசு, பணம் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலட்சியம் ஆபத்து தரும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நம்பிக்கை பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வைராக்கியம் தளரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குடும்ப அமைதிக்கு மௌனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எவரையும் எதிர்க்கக் கூடிய துணிவு பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுயபுத்தி இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நடக்காது என்று யோசித்த ஒரு காரியம் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முடிவில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் பலரும் உங்களை குழப்ப முயற்சி செய்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய பணம் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் நிறையும்படியான நிகழ்வுகள் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி காணலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படக் கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன பயணங்களில் கவனம் தேவை.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சினைகள் மற்றவர்களை தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கக்கூடிய கவலைகள் அகல கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சிலர் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -