இன்றைய ராசிபலன் – 08 ஏப்ரல் 2024

Rasi-palan-new8
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக வராத கடன் தொகையை இன்று வசூல் செய்யலாம். உங்களுடைய நிதி நிலைமை சீராகும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சனை எல்லாம் சரியாகும். நீங்கள் அடமானத்தில் வைத்த நகையை மீட்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நேரமும் காலமும் கூடி வரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடுவது, புதிய படிப்புக்கு அப்ளிகேஷன் போடுவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கியில் புதிய கணக்கு தொடங்குவது, சீட்டு போடுவது போன்ற நல்ல செயல்பாடுகள் உங்களுக்கு இன்று நல்ல ஆதாயத்தை பெற்று தரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். மன பயம் இருக்கும். பயத்தோடு நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும், அது நல்ல படியாக நடந்து முடியாது. அன்றாட வேலையை கொஞ்சம் கவனத்தோடு செய்யுங்கள். நேர்வழியில் செல்பவர்களுக்கு மனதில் பயம் தேவை கிடையாது. குறுக்கு வழியில் செல்பவர்கள் தான் பயப்பட வேண்டும். உங்கள் மீது தவறு இல்லை என்றால் இன்று நீங்கள் எந்த இடத்திலும் தலைகுனிந்து நிற்காதீர்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சம்பளமும் உயரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்த காரியம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புங்கள். இது என்னால் முடியாது என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தவே கூடாது. நிச்சயம் உங்களால் எல்லாம் முடியும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சில பேருக்கு சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் விருந்தளிகளின் வருகை இருக்கும். மனசு சந்தோஷம் அடையும். மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். உற்சாகத்தோடு இன்றைய வேலையை சுறுசுறுப்பாக முடித்துவிடுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலையான நாளாக இருக்கும். எந்த வேலையும் சுறுசுறுப்பாக ஓடாது. மனசு எதையோ நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும். அடுத்தவர்களை பார்த்து ஆதங்கத்தோடு ஏக்கத்தோடு உங்களுடைய வேலைகளை செய்யாமல் விட்டு விடுவீர்கள். அடுத்தவர்களை எட்டி பாக்காதீங்க. உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் இன்று நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வாரத்தின் தொடக்கத்திலேயே இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தால், இந்த வாரம் முழுவதும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதிகாலை வேலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து எப்படியாவது சுறுசுறுப்பை வர வைத்துக் கொண்டு அன்றாட வேலையை செய்ய தொடங்கிடுங்கள். சின்ன சோம்பேறித்தனம் பெரிய கஷ்டத்தை கொடுக்கும் ஜாக்கிரதை.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று அடுத்தவர்களுடைய பஞ்சாயத்துக்கு போகக்கூடாது. வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையை பார்க்க வேண்டும். அலுவலகத்தில் ரொம்பவும் நண்பர்களாக இருந்தால் கூட அவர்களுக்கு அட்வைஸ் செய்யாதீங்க. இரண்டு பேருக்கு பிரச்சனை என்றால் நடுவில் போய் நிக்காதீங்க. மேலதிகாரி என்ன சொன்னாலும், சரி சரி என்று தலையை ஆட்டிக் கொள்ளவும். உங்கள் மீது நியாயம் இருந்தால் கூட அதை நியாயப்படுத்தி பேசாதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் இருக்க வேண்டும். எந்த வேலையிலும் கவனக் குறைவோடு இருக்கக் கூடாது. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். அடுத்தவர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. கூடுமானவரை கைமாத்தாக பணம் வாங்கி திருப்பித் தருகிறேன் என்று சொல்லி சமாளிக்க பாருங்கள். கடன்காரர் உங்களிடம் பணம் கேட்டால் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது அரசாங்க வாய்ப்புகளை தேடிக் காத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதல் முயற்சியை போட்டால் நிச்சயம் உங்களுக்கான நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் வந்த இடர்பாடுகள் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடன் பெறலாம். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை விடாதீர்கள். கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். எல்லாம் நம்மால் சாத்தியமில்லை. நமக்கு மேல் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் உங்களுடைய எல்லா குடும்ப விஷயத்தையும் அதில் பகிராதீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று காலையில் சீக்கிரமே எழுந்து கொள்ள வேண்டும். குறித்த நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலையை தொடங்கி விடுங்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் லேட்டானால் இன்றைய நாள் சொதப்பிவிடும். டென்ஷன் ஆவீர்கள். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்று செய்யலாம் தவறு கிடையாது. ஆனால் இன்றைக்கு செய்யக் கூடிய வேலை நாளை தள்ளிப் போடலாம் என்று மட்டும் நீங்க யோசிக்கவே கூடாது.

- Advertisement -