இன்றைய ராசிபலன் – 08 ஆகஸ்ட் 2022

today rasi palan 08/08/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் எதை தொட்டாலும் அது பொன்னாகும் அற்புதம் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்டவை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு இனிய நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அபரிமிதமான லாபத்தை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் திக்கு முக்காட செய்யும். வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. எப்போதும் யாராவது ஒருவர் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு ஆதரவு பெருகும். சுய தொழிலில் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகளுக்கு அணை போட்டு வைப்பது நல்லது. நினைத்தது நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி ஏற்பட புதிய உத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்கள் எண்ணிக்கை கூடும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத இடங்களில் உங்களுடைய விவாதங்களை தவிருங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை முழுவதும் நேர்மறையாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதராத காரியம் சிதறாது என்பதை நினைவில் வைப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக வேலை பளுவின் காரணமாக உடல் சோர்வுறும், தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும். தேவையற்ற மணக்குழப்பங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை சேவை. புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் மறந்து புத்துணர்வுடன் செயல்படக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடையும் யோகம் உண்டு. வீண் பொழுது போக்குகளில் உங்களுடைய நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனக்கட்டுப்பாடு இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். தொழில் மட்டும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுக்க முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே சந்தேகிப்பதை தவிருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் சிறு சிறு மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. சங்கடங்கள் தீர குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் எதை செய்ய நினைத்தீர்களோ அதை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

- Advertisement -