இன்றைய ராசிபலன் – 09 ஜனவரி 2024

Rasi-palan-new9
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், வரவுகள் அதற்கு ஏற்றது போல வரும். அதனால் கவலைப்படாமல் பொங்கலுக்கு தேவையான சுப செலவுகளை தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். எல்லா விஷயத்திற்கும் பயந்து பின்தங்கி நிற்காதீர்கள். சில விஷயங்கள் தவறு என்றால், உடனடியாக தட்டிக் கேட்பது உங்களுடைய உரிமையை பெற்று தருவதாக அமையும். தொழிலில் கணக்கு வழக்குகளை அன்றன்றே சரி பார்ப்பது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இருந்தாலும் பம்பரமாக ரெக்கையை கட்டிக்கொண்டு சுறுசுறுப்பாக எல்லா வேலையையும் முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் அதிக ஆர்வம் இருக்கும். பொங்கல் வேலை தொடங்கியிருக்கும். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். முதலீடு செய்யும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் என்ன பிரச்சனை வரும் என்பதை நீங்கள் இன்றே சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நல்லது நடக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று வருமானம் அதிகமாக இருக்கலாம். ஆனால் மாத கடைசியில் கஷ்டம் வரக்கூடாது என்றால் இந்த பொங்கலுக்கு செய்யக்கூடிய செலவை நீங்க சிக்கனமாக செய்யணும் பார்த்துக்கோங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்‌. வாரா கடனை வசூல் செய்ய சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. சிரமம் பார்க்காமல் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள். பாவம் பார்த்தால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சொந்த பந்தத்திற்குள் சண்டை வர வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மறை ஆற்றல் பிறக்கக்கூடிய நாளாக இருக்கும். பாசிட்டிவா யோசிப்பீங்க. பாசிட்டிவா வேலை செய்வீங்க. இன்றைய நாள் முழுவதும் எந்த ஒரு தடங்கலோ தடைகளோ இல்லாமல் சுமுகமாக செல்லும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான பெட்டிஷனை மேலதிகாரிகளிடம் போடலாம். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். எதை செய்வதாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து பெரியவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எரிச்சலான நாளாக இருக்கும். எதைத் தொட்டாலும் குற்றம் குறை சொல்ல நாலு பேர் வந்து விடுவார்கள். எதற்காக வேலைக்கு சென்றோம், எதற்காக கடைக்கு சென்றோம் என்று யோசிப்பீர்கள். ஆனால் மனதை தெளிவாக வச்சுக்கணும். குழம்பி விடக்கூடாது. யார் என்ன தொல்லை கொடுத்தாலும் அவர்களுக்கு பதிலுக்கு சவால் விடுங்கள். ஆனால் உங்களுடைய குறிக்கோளில் உறுதியா இருந்துக்கோங்க பிரச்சனை இருக்காது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று எதிர்கால லட்சியத்திற்கு தேவையான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். வெற்றி கிடைக்கக்கூடிய நாள் இது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். புதிய முதலீட்டுக்கு கடன் கிடைக்கும். சின்ன சின்ன வியாபாரிகள் கூட இன்று கை நிறைய சம்பாதிப்பீர்கள். பொங்கலுக்கு தேவையான செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். யாரிடமாவது கைநீட்டி கடன் வாங்கி இருந்தால், அதை எப்படிபட்டாவது திருப்பிக் கொடுக்க பாருங்கள். சில அவமான சம்பவங்கள் நடக்க என்று வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேலை உங்களால் பணத்தை திருப்பி தர முடியவில்லை என்றால் கடன் காரருக்கு ஒரு ஃபோன் செய்து அடுத்த வாரம் தருகிறேன் என்ற வார்த்தையை யாவது சொல்லி வையுங்க. தவிர அவர்களை அலைகழிக்க விடாதீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளுக்கு ஏற்ப வெற்றி இருக்கும். நிறைய உழைப்பை போட்டால் நிறைய லாபம் உண்டு. குறைய உழைப்பை போட்டால் குறைந்த லாபம் உண்டு. ஆகவே விடாமுயற்சி மட்டும் தான் உங்களுக்கு இன்று விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மன அழுத்தத்தால் முன்கோபப்பட்டு வாழ்க்கை துணையை வெறுப்பது போல பேசக்கூடாது. இருவருக்குள் புரிதல் இருந்தால் குடும்பம் சந்தோஷம் பெறும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் பொறுமையாக பேசுங்கள். மன் கோபடாதீர்கள். விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். குறிப்பாக கணவன்மார்கள், மனைவிமார்களை அனுசரித்து செல்ல வேண்டும். இல்லை என்றால் வீட்டில் பிரளயம் உண்டாகும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எப்போதோ கண்ணுக்கு தெரியாமல் முதலீடு செய்து வைத்திருந்த பணத்தின் மூலம் லாபம் கிடைக்கும். ஆன்லைன் பிசினஸ் சக்சஸ் ஆகும். பேராசைப்படக்கூடாது, வந்த வருமானத்தை வைத்து சந்தோஷமாக செலவு செய்ய பாருங்கள். இன்று உங்களுக்கு பேராசை பெருநஷ்டத்தை கொடுத்து விடும். வருமானம் அதிகமாக வந்தாலும் திரும்பவும் அதே விஷயத்தை செய்கிறேன் என்று, அதிக முதலீட்டை செஞ்சுடாதீங்க தப்பு கணக்காகி விடும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசோர்வு இருக்கும். மனசு சரி இருக்காது. வீட்டில் மனைவியுடன் சண்டை வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் அனுசரணியாக நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தில் வார்த்தையை விடாதீங்க. எது தவறு எது சரி என்று உங்க புத்திக்கு எட்டாது. நீங்க பாட்டுக்கு ஒரு பக்கமே சுயநலமாக சிந்தித்து அறிவை இழந்து கோபத்தை வெளிக்காட்டி கெட்ட பெயர் எடுக்க வாய்ப்புகளும் உள்ளது ஜாக்கிரதை.

- Advertisement -