இன்றைய ராசிபலன் – 09 பிப்ரவரி 2024

Rasi-palan-new9
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியான நம்பிக்கை அதிகமாக இருக்கும். குறிப்பாக முன்னோர்களது வழிபாடு, திதி தர்ப்பண காரியங்களில் உங்களுடைய நாள் பிஸியாக இருக்கும். சில பேருக்கு வாழ்க்கையில் இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். எந்த முடிவு எடுப்பது என்ற தடுமாற்றமும் இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். ஒன்றுக்கு இரண்டு பேரிடம் ஆலோசனை பெறுங்கள். அனுபவ சாலிகளிடம் கேட்ட பிறகு அந்த பிரச்சனைக்கு நாளை தீர்வு காணலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கும். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மன பக்குவமும் உங்களுக்கு இருக்கும். தாய் தந்தை இல்லாதவர்கள் திதி தர்ப்பண காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதில் எந்த குறையும் இருக்காது. முன்னோர்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். முடிந்தால் இன்று மாலை குடும்பத்தோடு குலதெய்வத்தை நினைத்து வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாம். வீட்டு பக்கத்தில் குலதெய்வ கோவிலில் இருந்தால் குடும்பத்துடன் இன்று போயிட்டு வாங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். இத்தனை நாள் பிரச்சனை கொடுத்து வந்த தொல்லைகள் எல்லாம் உங்களை விட்டு ஓடிவிடும். வேகம் மட்டுமல்ல, விவேகத்தோடு செயல்பட்டு இன்று நீங்கள் நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். முன்னோர்கள் வழிபாடு சிறப்பாக வீட்டில் நடந்து முடியும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மன திருப்தி அடைவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று காலமும் நேரமும் சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் ஒன்று செய்ய, விதி வேறு ஒரு வழியில் செல்லும். ஆகவே கொஞ்சம் டென்ஷன்கள் கூடுதலான நாளாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் அசதியால் வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். முன்னோர்களது திதி தர்ப்பண காரியங்களை செய்யக்கூடிய வீட்டில் நல்லபடியாக வழிபாடுகள் நடந்து முடியும். மனதிருப்தி உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்கள் எல்லாம் சரியாகும். குடும்ப கஷ்டங்கள் தீர இன்று வயதான தம்பதியருக்கு உங்களால் முடிந்தால் அன்னதானம் செய்வது சிறப்பு. அது உங்களுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பெரிய பிரச்சனை முடிந்துவிடும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள். எதிரி தொல்லை விலகும். ஆரோக்கியம் மேம்படும். முன்னோர்கள் வழிபாட்டை மறக்காதீங்க. திதி தர்ப்பண காரியங்களை சரியாக செய்யவும். பெற்றோர் இல்லாதவர்கள் கட்டாயம் இன்று ஒரு வயதான தம்பதியருக்கு அன்னதானம் செய்யணும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் ஏதோ ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். பெற்றோர் இல்லாதவர்கள் திதி தர்ப்பண காரியங்களை சரியாக செய்து முடித்திருப்பீர்கள். மனநிறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் ஏதோ ஒரு குறையை கண்டது போல மனசு அலைபாயும். ஆனால் அதெல்லாம் எதுவுமே கிடையாது. உங்கள் மனதை அமைதி படித்துக் கொள்ள முன்னோர்களையும், குலதெய்வத்தையும் இன்று முழுசாக நம்பி வழிபாடு செய்யுங்கள். மற்றபடி வேலை தொழில் எல்லாம் உங்களுக்கு இன்றைய தினம் சிக்கல் இல்லாமல் தான் செல்ல போகிறது.

விருச்சிகம்


விருச்சக ராசி காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாகத்தான் இருக்கும். திறமைகள் வெளிப்படும். சமாளிக்க முடியாத மனிதர்களை கூட, போல்டாக பேசி, சமாளித்து விழ்த்தி தள்ளி விடுவீர்கள். இவன் கிட்ட எல்லாம் பேசவே முடியாது என்று சில பேர் இருப்பார்கள் அல்லவா. அப்படிப்பட்டவர்களை கூட இன்று நீங்கள் அடக்கி ஆளுவீர்கள். அந்த அளவுக்கு உங்களுடைய திறமை வெளிப்படும். இன்று தை அமாவசை. உங்களால் முடிந்தால் ஒரு பசு மாட்டிற்கு இரண்டு வாழைப்பழம் வாங்கி கொடுங்கள். புண்ணியம் சேரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும். காலையில் நேரமே உங்களுடைய வீட்டில் முன்னோர்களது வழிபாட்டை முடித்திருப்பீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். இன்று அமாவாசை தான். சுபகாரிய பேச்சுக்களை தொடங்கக்கூடாது தான். இருந்தாலும் அதற்கான பிள்ளையார் சுழியைப் போட யாராவது வந்து ஒரு நல்லதை உங்கள் காதில் சொல்லுவார்கள். அது முன்னோர்கள் உங்களுக்கு தந்த நல்ல விஷயம். ஏற்றுக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுப்பில்லாமல், அவர்களுடைய வேலையை செய்வார்கள். தை அமாவாசை வீட்டில் அவ்வளவு வேலை இருக்கிறது. பெற்றோர் இல்லாதவர்கள் முன்னோர்களது வழிபாட்டை செய்ய வேண்டும். திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆனால் காலையில் கண்விழித்ததே காலதாமதமாக இருக்கும். அவசர அவசரமாக இன்றைய நாள் செல்ல போகிறது. ஆனால் இன்றைய நாள் இறுதியில் நீங்க சந்தோஷமா இருப்பீங்க. எல்லா வேலையையும் நல்லபடியா முடிச்சு இருப்பீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். பல நாட்களாக உங்களைத் திட்டிக் கொண்டே இருந்தவர்கள், இன்று வாழ்த்த போகிறார்கள். எதிரிகள் கூட கைகோர்த்து நல்லவர்களாக மாறிவிடுவார்கள். எதிர்காலத்திற்கு தேவையான சில பல நல்ல விஷயங்களை இன்று மேற்கொள்வீர்கள். குறிப்பாக அடுத்தவர்கள் சொல்வதை நின்று நிதானமாக காதில் கேட்கக் கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு வந்திருக்கும். நல்லதே நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது முழுவதும் அந்த கடவுள்தான் நிறைந்திருக்கப் போகிறார். அந்த இறைவனின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறப் போகிறீர்கள். திருப்தியாக முன்னோர்களது வழிபாட்டை செய்து முடித்து இருப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். அலுவலக வேலை எல்லாம் பெரிய அளவில் பிரச்சனையை தராது. உங்க டார்கெட்டை நீங்க அழகா மாச முதலிலேயே முடித்துவிட்டு சந்தோஷமா இந்த நாளை கடந்து செல்ல போகிறீர்கள்.

- Advertisement -