இன்றைய ராசிபலன் – 09 ஏப்ரல் 2022

today rasi palan 09/04/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அமைதியாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருகும். புதிய தொழிலாளர்களை நியமிப்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். வேகம் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கொடுக்கக்கூடிய உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் வேண்டுதல் பலிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதக பலன் உண்டு. ஆரோக்கியம் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் பலன் தரும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமை தவறாமல் நடந்து கொள்வது நல்லது. அலட்சியம் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் தேவையற்ற பேச்சு வார்த்தைகள் ஏற்படலாம். பொறுமை காப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனி திறமையை வெளி உலகிற்கு காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய உதவி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் இரட்டிப்பாக புழங்கும். அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவை அறிந்து மற்றவர்கள் செயல்படுவதாக உணர்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் சூடு பிடிக்கத் தொடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு சாதக பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இல்லத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதன் நெளிவு சுளிவுகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் நீண்ட நெடிய பயணம் அமைய வாய்ப்பு உண்டு.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் புது வெளிச்சத்தை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -