இன்றைய ராசிபலன் – 09 ஏப்ரல் 2024

Rasi-palan-new9
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் எந்த அளவுக்கு வேலையில் கவனமாக பொறுப்போடு இருக்கிறீர்களோ, அதே அளவுக்கு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் விஷயத்திலும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும்போது அலுவலக நினைப்போடு வராதீங்க. இன்று வீட்டுக்குள் நுழையும் போது குடும்பத்தைப் பற்றிய யோசனை தான் உங்களுக்குள் இருக்க வேண்டும். வேலை வேலை என்று இருந்து, குடும்பத்தை மறந்து விட்டால் இல்லற வாழ்க்கை சிறக்காது. இன்று பணம் சம்பத்தப்பட்ட விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வெளித்தோற்றம் கூடுதல் அழகை கொடுக்கும். பார்ப்பவர்களை கவரும் அளவுக்கு உங்களுடைய புன்னகை இன்று பிரகாசமாக இருக்கும். வீட்டில் சுப காரியம் செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நன்மை உண்டு. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடமானத்தில் வைத்த தங்க நகையை மீட்டெடுக்கவும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கனவுகள் நினைவாக கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் எதிர்பாராத நபரின் சந்திப்பு புதிய மாற்றத்தை உண்டு பண்ணும். வாழ்க்கையில் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு நல்லது இன்று நடப்பதற்கான எல்லா அம்சங்களும் நிறைந்து இருக்கின்றது. பங்குச்சந்தையில் முதலீடு செய்து இருப்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள் இது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக தான் இருக்கும். வேலை தொழில் இதில் எல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் உங்களுடைய தாய் மாமன் வழி உறவால் நல்லது நடக்கும். ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக பேசுங்கள். தெரியாத மூன்றாவது நபரிடம் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளிடம் பணிவாக பேசவும். உறவுகளுக்குள் சண்டை வந்தால் கவனமாக இருங்கள் வார்த்தைகளை விடாதீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கைவிடக்கூடாது. எதுவாக இருந்தாலும் நிதானமாக பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள். புதிய வாய்ப்புகள் தேடி வந்தால் முயற்சி செய்து பார்க்காமலேயே ஒதுங்கி விடாதீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சில கரடு முரடான பாதைகளை கடந்து சென்று தான் ஆக வேண்டும். உங்களுடைய இளகிய மனதை கொஞ்சம் இறுக்கமாக மாற்றிக் கொண்டால் இன்று நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்ற பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். தொழிலில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். அன்றாட வேலைகளை கவனத்தோடு செய்தாலே நன்மை நடக்கும். எதிர்ப்பாலின நட்போடு கவனமாக இருங்கள். அலுவலகத்தில் அனாவசியமாக அடுத்தவர்களிடம் பேசாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பலவிதமான கவலைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பண பிரச்சனை கடன் சுமை சொத்து பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மனக்கவலை எல்லாம் நீங்கி நிம்மதியா நன்றாக தூங்கக்கூடிய நாள் இது. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து உங்களை நீங்கள் விளக்கிக் கொண்டால் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து சில விஷயங்களை பேச வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடிய உங்களுடைய நடவடிக்கை அடுத்தவர்களுடைய மனதை புண்படுத்தும். அது ரொம்ப ரொம்ப தவறு. எதுவாக இருந்தாலும் ஒரு சபை நாகரிகத்தோடு நடந்து கொள்ளுங்கள். பொறுமையை இழந்து முன்கோப பட்டால் அவமானம் உங்களுக்குத்தான் பாத்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சங்கடங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். ரொம்பவும் தைரியசாலிகளாக இருந்தாலும் உங்களுடைய மனது பலவீனப்படும். எந்த வேலையை எப்படி செய்வது என்று தெரியாமல் சில பேர் திணறுவீர்கள். பொறுமையாக இருங்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் பயப்படாதீங்க. நாலு அனுபவ சாலிகளிடம் உங்களுடைய பிரச்சனைகளை சொல்லி அதற்கு உண்டான தீர்வை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். பதட்டத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களின் ஆலோசனையால் சில பிரச்சனைகளை சுமூகமாக முடித்து விடுவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனத்தோடு இருக்கவும். முன்பின் தெரியாத நபரிடம் ரொம்பவும் பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ளாதீர்கள். யாரிடமாவது நீங்கள் ஏமாற வாய்ப்பு உள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனையில் சில மாற்றங்கள் இருக்கும். புதுசு புதுசாக ஏதேதோ விஷயங்களை யோசிப்பீர்கள். அது உங்கள் மனதிற்கு நல்லது என்ற பட்டாலும், எந்த யோசனையும் பெரிய லாபத்தை கொடுக்காது. எவ்வளவுதான் திறமை இருந்தாலும் உழைப்பு இல்லை என்றால் அந்த திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய திறமையை வைத்து வாழ்க்கையை முன்னேற கூடுதல் உழைப்பை போடுங்க நல்லது நடக்கும்.

- Advertisement -