இன்றைய ராசிபலன் – 09 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வராத பணம் வந்து சேரும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குழப்பமான மனநிலை இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க கூடும். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் இருக்காது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த காரியங்களிலும் கடும் முயற்சிக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு பெண்கள் வழியில் தன வரவு உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசினருக்கு இன்றைய தினம் பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் இருக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். வீட்டில் குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொலைதூரப் பயணத்தால் சிலருக்கு அசதி ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்று ஆதாயங்கள் ஏற்படும். நண்பர்களால் தன வரவு உண்டாகும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவார்கள். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த பணம் வரவு இருக்கும். சிலர் கோயில்களுக்கு சென்று வருவார்கள்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபமே இருக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவு சிலருக்கு உண்டாகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களின் ஆதரவு இருக்கும். சிலர் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். அரசியல் தொழிலில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணவரவுகள் இருக்கும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப காரிய செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயங்கள் இருக்கும்.

- Advertisement -