இன்றைய ராசிபலன் – 09 ஜூன் 2022

today rasi palan 9/06/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரக் காத்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பேராசை பெரு நஷ்டம் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்லும் திறன் தேவை. பெண்கள் சமயோஜிதமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் இருக்கும் இறுக்கம் நீங்கி மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கும் சூழ்நிலை நிலவும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைப்பு சாதகமற்ற தாக இருக்கிறது. தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தை எச்சரிக்கையாக கையாளுங்கள். தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மேலும் வலுவாகாமல் இருப்பதை பார்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைப்பு சாதகமானதாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு தேவை, உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். புதிதாய் பூத்தது போல ஒரு உணர்வு மனதில் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முடிவு சாதகமான பலன்கள் கொடுக்கும். உங்களுடைய மனம் சொல்வதை கேட்டு செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் லாபத்தை அடையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் வம்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை தைரியமாக செய்யக்கூடிய அமைப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை விலக்கி ஒற்றுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும் அற்புதமான நாளாக இருக்கிறது. பிரிந்துசென்ற உறவுகள் மீண்டும் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கணக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் கூடுதல் விழிப்புணர்வு தேவை.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கடமை அறிந்து செயல்பட வேண்டும். பொறுப்பில்லாமல் செயல்பட்டால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண பரிமாற்ற விஷயத்தில் கவனம் தேவை.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி தரக்கூடிய நல்லா அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய விடாப்பிடியான முயற்சிகளுக்கு பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான நாள் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் செயல்படக் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒத்துழைப்பு தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து அதிர்ஷ்டம் வரப்போகிறது.

- Advertisement -