இன்றைய ராசிபலன் – 09 ஆகஸ்ட் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் புதிய காரிய முயற்சிகளில் இழுபறி உண்டாகும். அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும். உறவினர்கள் வழியில் தனலாபம் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்துடன் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறும், மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மனநிறைவான பொருள் வரவு இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத சோதனைகள் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு தாமதங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசாங்க வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய மனிதர்கள் நட்பு நன்மைகளை கொடுக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் எச்சரிக்கை அவசியம். புதிய மனிதர்களிடம் காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்கள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சொத்து விவகாரங்களில் இழுபறி உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளால் லாபங்கள் இருக்கும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். எதிரிகள் விலகுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். மக்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பெறுவார்கள். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை பெருகும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று மன அமைதி பெறுவார்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரம் விரிவு பெற்று லாபங்கள் பெருகும். பழைய கடன் தொகைகளை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். சிலருக்கு சுபகாரிய விரயங்கள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் வாழ்க்கை துணையுடன் அன்னோன்யம் கூடும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். கவலைகள் நீங்கும்.

- Advertisement -