இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2023

Rasi-palan-new9
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத ஒரு நல்ல விஷயத்துக்கு நல்ல பெயர் எடுக்க போறீங்க. மேலதிகாரிகளிடம் பாராட்டு வாங்கலாம், அல்லது மாணவர்கள் ஆசிரியர்களிடமும் பாராட்டு வாங்கலாம். ஆக மொத்தம் உங்களுக்கு இன்னைக்கு நல்ல பெயர் கிடைக்க போறது உறுதி. நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள இன்னும் கொஞ்சம் நல்லா கடினமா உழைக்க வேண்டும். நேர்மையோடு இருக்கணும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புத்திசாலித்தனம் வெளிப்படும். எல்லா விஷயத்திலும் திறமையோடு பேசுவீர்கள். யாராவது வந்து உங்களிடம் குதர்க்கமான கேள்விகளை கேட்டால் கூட, அதற்கு மூக்கை உடைக்கும் படி பதில் சொல்வீர்கள். எதிரிகளுக்கு சவால் விடப்போகும் நாள் இது. வெற்றிவாக சூடுவீர்கள். கொஞ்சம் முன் கோபம் இருக்கும். இதனால் சின்ன சின்ன பகை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இயல்பான வாழ்க்கை இருக்கும். எல்லா வேலைகளும் சுமூகமாக நடக்கும். காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சின்ன சின்ன வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதே சமயம் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்ய தொடங்குவீர்கள். தீபாவளிக்கு உண்டான வேலையை இன்றே தொடங்கி விடுவீர்கள். வீட்டில் பண்டிகை நாள் பிறந்ததற்கான அறிகுறி தெரிந்து விடும். சந்தோஷம் கலைக்கட்டும். நீண்ட தூர பயணம் வெற்றியைக் கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்களால் நிறைய நல்லது நடக்கும். அப்பா அம்மா சித்தப்பா சித்தி பெரியம்மா பெரியப்பா என்ற உறவுகள் பண்டிகைக்கு உங்களுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசியை செய்வாங்க. குடும்பத்தோடு குதூகலமாக இன்னைக்கு நேரத்தை செலவழிப்பீர்கள். அதேசமயம் அலுவலக பணியும் ரொம்ப ரொம்ப முக்கியம் அல்லவா. பர்மிஷன் போடுவது, இன்றைக்கான வேலையை நாளைக்கு தள்ளி வைப்பது என்று எதுவும் செய்யக்கூடாது. உங்க தினசரி வேலையை கரெக்டா பாக்கணும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சஞ்சலங்கள் ஏற்படும். எதிர்ப்புகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மேலதிகாரிகளின் கண்டிஷன் சில சிக்கல்களை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. வேறு வழி கிடையாது. நமக்கு மேல் இருப்பவர்கள் சொல்வதை கொஞ்சம் கேட்டு தான் ஆக வேண்டும். அது சரியோ தவரோ எதிர்த்து பேசுவதை குறைத்துக் கொண்டால் நல்லது. சமாதானமாக பேசியவர்களுக்கு பிரச்சினை கிடையாது. சண்டை போடுபவர்களுக்கு நிச்சயம் பிரச்சனை வரும் ஜாக்கிரதை.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதியான நாளாக இருக்கும். ருசியாக சமைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ருசியாக சாப்பாடு போட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாமியார் வழி உறவுகளால் நன்மை நடக்கும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். எந்த கவலையும் இருக்காது. எல்லா வேலையும் அது பாட்டுக்கு நல்லபடியாக செல்லும். மாமியார் மருமகள் உறவு வலுப்பெறும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பெட்டிக்கடை வைத்திருப்பவர்களுக்கு வியாபாரத்தில் இன்று பெரிய அளவில் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது சொத்து பத்து பிரச்சனைகள் இருந்தால் அதை இன்று கையில் எடுக்கலாம். புதுசாக நிலம் வாங்க பார்க்க போகணும், வீடு வாங்க பாக்க போகணும், என்பவர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தங்க நகை வாங்க வேண்டும் ஆடை ஆபரணங்கள் புதுசாக எடுக்க வேண்டும் என்பவர்கள் இன்று புதுசாக வாங்கலாம். இன்று உங்களுக்கு நன்மையே நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்துக்கோங்க. மற்றபடி வேலை செய்யும் இடத்தில் சக மனிதர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு பெரிய வெற்றியை கொடுக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு இருக்கும். பெரிய பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். மனைவிக்கு பிடித்தமான விஷயங்களை செய்வீர்கள். மனைவி கணவனுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து சந்தோஷப்படுவீர்கள். குழந்தைகளுடன் சந்தோஷமாக இந்த நாள் செல்லும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். கடந்த சில நாட்களாக நிதி சிக்கலில் சிக்கியவர்கள், அதிலிருந்து வெளி வருவீர்கள். கைக்கு பணம் வந்து சேரும். சந்தோஷமாக பண்டிகை கொண்டாட தொடங்கி விடுவீர்கள். மனைவி குழந்தையுடன் மகிழ்ச்சியோடு இன்றைய நேரத்தை செலவழிக்க வாய்ப்புகள் உள்ளது. மாலை நேரம் சந்தோஷம் பிறக்கும். காலையில் கொஞ்சம் வேலையில் டென்ஷனும் இருக்கும்.

- Advertisement -