இன்றைய ராசிபலன் – 10 ஜனவரி 2024

Rasi-palan-new10
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அறிவாற்றல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் கையில் ஒரு வேலையை ஒப்படைத்தால் அதில் ஆதி முதல் அந்த முறை அலசி ஆராய்ந்து தெளிவாக அந்த வேலையை செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். இன்று மாலை ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். தொழிலில் சிறப்பான நல்லது நடந்தாலும், கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். அதிரடியாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் இருக்கட்டும். புதிய முயற்சிகளை ஈடுபட வேண்டாம். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவு வந்தால் யாராவது ஒருவர் அமைதி காக்கவும். விட்டுக் கொடுக்கவும். இரண்டு பேரும் வாக்குவாதம் செய்யக்கூடாது. இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்பு கரையும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் உண்டு. நீங்கள் மனதில் நினைத்த நல்லது எல்லாம் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரனை உங்கள் மேல் விழும். நீங்கள் செய்யக்கூடிய நல்லதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் மீது பழி சுமத்தியவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகி விடுவார்கள். விவசாயத்தில் முதலீடு செய்பவர்கள், கூடுதல் கவனத்தோடு இருக்கவும். தைத்திருநாள் வரப் போகின்றது. அறுவடை நேரத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று அதிபுத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களுக்கு அடிக்கும். உங்கள் திறமையை பார்த்து எதிராளி மூக்கின் மேல் விரலை வைப்பாங்க. கவலையே படாதீங்க இன்று நிச்சயம் பாராட்டு மழை உண்டு. லாபம் நிறைந்த நாள் இது. உங்களிடம் சண்டை போட்டவர்கள் கூட அவர்களே வந்து நட்புறவு பழகுவார்கள். இருந்தாலும் கெத்தை விட்டுக் கொடுக்காதீங்க. கொஞ்சம் பிகு பண்ணிக்கிட்டா ஒன்னும் தப்பு கிடையாது. நமக்கு நேரம் வரும்போது தான் நம்முடைய ஆட்டத்தை ஆடனும் அல்லவா.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சி இருக்கும். குட்ட குட்ட குனிந்தது போதும் என்று எதிர்த்து போராடி சண்டை போட தொடங்கி விடுவீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீங்க. வந்தா மலை போனால் டேஷ் என்று போய்க்கொண்டே இருப்பீர்கள். எல்லா விஷயத்தையும் மனதில் போட்டுக் கொண்டு குழப்பிய காலமெல்லாம் முடிந்து விட்டது. என்று உங்கள் ஆட்டம் தான். ஜமாய்ங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரும். வாழ்க்கை என்றால் கஷ்டமும் நஷ்டமும் சேர்ந்ததுதான் என்பதை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். முதலீட்டில் கவனமாக இருந்துக்கோங்க. வேலை செய்பவர்கள் பார்ட்னர் என்று எல்லோருமே உங்களுக்கு எதிராக பேசக்கூடிய கால நேரம் இருக்குது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. எல்லோரையும் அனுசரித்து சரியான முறையில் வழிநடத்த கொஞ்சம் தந்திர வேலைகளை பின்பற்ற வேண்டியதாக இருக்கும் பார்த்துக்கோங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக சிந்தித்து செயல்படுவும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது. அனாவசியமாக அடுத்தவர்களுடைய பிரச்சனையிலும் முக்கை நுழைக்கக் கூடாது. இன்று முழுவதும் அமைதியாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். வேலை செய்யும் இடத்திலும் பொறுமையாக இருக்கணும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. தப்பு நீங்க செஞ்சாலும் சரி, எதிராளி செஞ்சாலும் சரி, பழி உங்கள் மேல் விழ வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்கள் இன்று யாரையும் நம்ப கூடாது. உங்களை நம்பனும். உங்கள் கடின உழைப்பை மட்டும் நம்பனும். அடுத்தவர்கள் இதை சொல்றாங்க அதை சொல்றாங்க என்று எடுத்த முடிவை மாதிக்காதீங்க. இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். வாழ்க்கை துணை சொல்லுவதை கேளுங்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுங்கள். எல்லோருக்கும் நல்லவனாக இன்று நடந்து கொள்ள முடியாது. அப்படி நடந்தால் அந்த நல்லதில் ஒரு போலித்தனம் இருக்கும். ஆகவே சரிக்கு சரி, தவறுக்கு தவறு என்று போய்க்கொண்டே இருங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று 24 மணி நேரமும், 24 நிமிடம் போல போய்விடும். இன்றைக்கு என்னமோ நேரமே பத்தாது. உங்களுக்கு அவ்வளவு சுறுசுறுப்பாக நாள் நகர்ந்து செல்லும். சந்தோஷம் இரட்டிப்பாகும். காதல் கைகூடும். மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகம் நிறைந்த இந்த நாளில் பொறுப்பாக உங்களுடைய அன்றாட வேலையை கவனிக்க மறந்துடாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஆர்வ கோளாறு இருக்கும். எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடிக்கணும் அப்படின்னு ஓடிக்கிட்டே இருக்க போறீங்க. இதனால் எந்த வேலையும் சரியாக நடக்கப் போவது கிடையாது. உடல் சோர்ந்து போவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே வேகத்தோடு விவேகத்தையும் சேர்த்துக் கொள்ளணும். கொஞ்சம் அறிவையும் யூஸ் பண்ணனும். சில இடங்களில் நாம் ஏன் முட்டாள் தனமாக செயல்படும் என்று உங்களுக்கே தோணும் பாத்துக்கோங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் நீங்கி உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் இருட்டிப்பாகும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன சங்கடங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக எதையும் செய்யாதீங்க. செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை மூன்றாவது நபர் சொல்லும் பேச்சை கேட்காமல், சுயமாக சிந்திப்பது நல்லது. வாழ்க்கை துணையை விட உங்களுக்கு நல்லது செய்பவர்கள் வேறு யாரும் இல்லை அதை நம்பனும் முதலில்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையில் ஈடுபட முடியாது. மேலதிகாரிகளின் பிரஷர் வேற கொஞ்சம் பிரச்சனையை கொடுக்கும். இன்று நாளை கடந்து செல்வதில் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி தான் இருக்கும். பிரச்சினை கிடையாது நாளை நல்ல மாற்றம் வரும். அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்தால் நல்லதே நடக்கும்.

- Advertisement -