இன்றைய ராசிபலன் – 10 பிப்ரவரி 2024

Rasi-palan-new10
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கான மரியாதை கிடைக்கும். இவர்கள் பாவம், அவர்கள் பாவம் என்று வரக்கூடிய பிரச்சினைகளுக்கு எல்லாம் விட்டுக் கொடுத்துக் கொண்டே சென்றால், பிறகு உங்கள் தலையில் மிளகாய் அரைச்சிடுவாங்க பாத்துக்கோங்க. நல்லவங்களா இருக்கலாம். ஆனால் ஏமாளியாக இருக்கக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இருக்காது. இன்றைய நாள் கொஞ்சம் சோதனைகள் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். எல்லா விஷயத்துக்கும் அவசரப்படாதீங்க. மேலதிகாரிகள் ஏதாவது வேலைகளை சொன்னால், அதை சரியான நேரத்திற்குள் முடித்துக் கொடுக்கவும். ஒருவரை பற்றி இன்னொருவரிடம் புறம் பேசக்கூடாது. அது உங்களுடைய நல்ல பெயரை கெடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையா இருத்துக்கோங்க. மூன்றாவது நபர்களை முழுசாக நம்பாதீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆச்சரியப்படக் கூடிய நிறைய நல்லது நடக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் எதிரியாக இருந்தவன், நண்பர்களாக மாறுவார்கள். நண்பர்களாக இருப்பவர்கள், எதிரியாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அதையும் உங்கள் மனதை ஏற்றுக் கொள்ளணும். அட இதுவா விஷயம். அப்படின்னு ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு செய்தி தொலைபேசியின் மூலமாகவோ, வியாபாரத்திலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ நிச்சயம் இன்று உங்களுக்கு நடக்கும். இதனால் வரை தெரியாத ரகசியத்தை தெரிஞ்சுக்க போறீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதில் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சூப்பரா வேலை செய்ததற்கான மெடல் கூட சில பேருக்கு கிடைக்கலாம். ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. அதாவது சிறந்த வேலைக்காரன், சிறந்த விசுவாசி அப்படி ஏதாவது உங்களுக்கு என்று ஒரு பட்டம் கிடைக்கும். சந்தோஷத்தில் ரெக்க கட்டி பறக்க போறீங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று அவ்வளவு எளிதில் முடிவு செய்ய முடியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள்‌. கடுகடு என்று திட்டிகிட்டு இருந்தவங்க உங்களை நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார். நெருங்கி நெருங்கி தேன் ஒழுக பேசியவர்கள் பாவக்காய் போல கசப்பான விஷயங்களை உங்களுக்கு செய்து விடுவார்கள். ஆகவே இன்றைய நாள் நீங்கள் கொஞ்சம் உஷாரா இருக்கணும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ஓய்ந்து போகக்கூடாது. நிறைய வேலை இருக்கும். அதை பார்த்து இந்த வேலையெல்லாம் எப்படித்தான் முடிக்க போகின்றமோ, என்று கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டாலும் முடிந்தது. பம்பரம் போல இன்னைக்கான வேலையை நீங்க சுத்தி சுத்தி செய்யணும். விடாமுயற்சி தான் உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். நிறைய தண்ணீர் குடிங்க ஆரோக்கியமான உணவை சாப்பிடணும். கடினமாக உழைக்கணும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகப்படியாக வெளியாகும் சூழல் இருக்கும். எரிச்சலை மூட்டும் சம்பவங்கள் அதிகமாக நடக்கும். உங்களை வெறுப்பேத்தவே நாலு பேர் வருவாங்க. தேவையில்லாத பேச்சுகளை பேசுவாங்க. ஆனால் அதை கண்டு நீங்கள் முன் கோபம் அடையக் கூடாது. டென்ஷன் ஆகி பதட்டத்தில் ஏதாவது பேசினால் பிரச்சனை உங்களுக்குத்தான். முன் கோபத்தை குறைக்க மனதிற்குள்ளேயே ஏதாவது ஒரு சாமி பெயரை சொல்லுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கவனக்குறைவு காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் செய்து திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். தலையில் கொட்டி இது தவறு என்று யாராவது சொல்லுவார்கள். அதற்கு கோபப்படக்கூடாது. தவறை திருத்திக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை போடக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை இன்று எல்லோருக்கும் பிடிக்கும். வசீகரத்தன்மையோடு இன்று உங்களுடைய நடவடிக்கை இருக்கும். பார்க்க அழகா இருப்பிங்க. பேசினாலும் அழகாக இருப்பீர்கள். கோபப்பட்டாலும் அழகா தான் இருக்க போறீங்க. ஆகவே இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல நாளாக அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மனதிற்கு பிடித்த நபர்களால் பாராட்டையும் வாங்குவீங்க. என்ஜாய் பண்ணுங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவை இல்லாத கவலை மனதை போட்டு குழப்பிக் கொண்டே இருக்கும். எந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குவீர்கள். கடன் தொல்லை, மனைவி பிரச்சனை, பிள்ளை பிரச்சனை, என்று ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வரும். சம்பளம் வந்திருந்தாலும் நிதி நிலைமை சில பேருக்கு மோசமாக இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். இன்றைய நாளை சமாளிக்க கொஞ்சம் சிரமம் இருக்கும். குல தெய்வத்தை வேண்டிக் கொள்ள நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். நான் இப்படித்தான் இருப்பேன் என்று வீம்பு பிடித்துக் கொண்டு நிற்காதீர்கள். அடம்பிடித்து சில விஷயங்களை சாதிக்காதீர்கள். இன்று நீங்கள் வளைந்து கொடுத்தால் தான் உங்கள் வாழ்க்கை பல நாட்களுக்கு சிரமம் இல்லாமல் செல்லும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது. இருக்கின்ற வேலையை விட்டு விடுவேன் என்ற சவால் எல்லாம் விட்டு பேசாதீங்க. அது ரொம்ப ரொம்ப தவறு. இந்த வேலை இல்லை என்றால், ஆயிரம் வேலை அப்படி எல்லாம் பேசக்கூடாது. சோறு போடும் வேலை தெய்வம். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். மனசு லேசாக இருக்கும். உறவுகளுக்குள் ஒற்றுமை நிலவும். ஆனால் கொஞ்சம் முன்கோபப்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு வாழ்க்கையை புரிந்து கொள்ள நிறைய அனுபவங்கள் நடக்கும். இந்த உலகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு சொன்னால் எல்லாம் புரியாது அனுபவ ரீதியாக பாடம் அடுத்தவர்கள் புகட்டும் போது தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அன்னைக்கே என்னுடைய பொண்டாட்டி சொன்னா, நான் தான் கேட்கலைன்னு ஃபீல் பண்ண போறீங்க.

- Advertisement -