இன்றைய ராசிபலன் – 10 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு லாபம் பெருகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன் பாக்கிகள் அனைத்தும் வந்து சேரும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் யோசித்து செயல்பட வேண்டும். பண வரவுகளில் தடை ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பணியிடங்களில் உங்கள் திறமையால் பாராட்டுகளை பெறுவீர்கள். கலைத்தொழில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் எதிர்பாரா வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாரா பொருள் வரவு உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் பெரியவர்களின் ஆசிகள் இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கூடிவரும். பெண்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு ஏற்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் வாழ்க்கைத் துணையின் மீது அக்கறை கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

தனுசு:
தனுசு ராசி நறுக்கு இன்றைய தினம் தாராளமான பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிடைக்காது. வீட்டில் உள்ளவர்களுக்கு மருத்துவ ரீதியிலான வீண் விரயம் ஏற்படும். பொருள் வரவில் இழுபறி நிலை ஏற்படும். ஒரு சிலர் கடன் வாங்கும் சூழலும் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் நிதி நெருக்கடிகள் தீரும். புதிய மனிதர்களால் பொருள் வரவு ஏற்படும். சிலர் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வார்கள். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். எதிர்பாரா பொருள் வரவு ஏற்படும். செல்வ நிலை உயரும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு மனமகழ்ச்சி அதிகரிக்கும். சிலர் மகான்களை தரிசித்து ஆசிகளை பெறுவார்கள்.

- Advertisement -