இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். சிந்தனை மற்றும் செயல்களில் தெளிவு இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். திருப்திகரமான பணவரவு இருக்கும். குடும்பத்தினர் அனுசரித்து செல்வார்கள். உறவினர்களால் நன்மை ஏற்படும். பயணங்களினால் ஆதாயம் இருக்கும். ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் இருக்கும். பிறருடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் ஈடேறும். காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பெண்கள் வழியில் தனலாபங்கள் இருக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் காரிய வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உணவு விடயங்களில் எச்சரிக்கை தேவை. புதிய காரியங்களை தொடங்க வேண்டாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் வாங்கும் சூழலும் உருவாகும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். மருத்துவ ரீதியான செலவுகள் சிலருக்கு ஏற்படலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகம் உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் செல்வாக்கு உயரும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். சிலர் குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வார்கள். பணியிடங்களில் சக ஊழியர்கள் உதவுவார்கள். பணம் தொடர்பான விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். தாராளமான தன வரவு இருக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

- Advertisement -