இன்றைய ராசி பலன் – 10-08-2020

rasi palan - 10-8-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையப் போகின்றது. நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் இருப்பீர்கள். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக செல்வது மிகவும் முக்கியம். தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய நாளாக இது அமையப் போகின்றது. பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சிகள் உண்டாகும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது பேச்சில் நிதானம் தேவை.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் செய்வதற்கு ஒரு சிறப்பான நாளாக இது அமைகின்றது. எதைத் தொட்டாலும் வெற்றி தரும். பணவரவு அதிகரிக்கும் காதல் விவகாரங்கள் கைகூடும். புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும். உங்கள் தன்னம்பிக்கை மேம்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியான நாளாக அமையும். எதிலும் நிதானமாக இருப்பீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களிலும் சுபம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். நண்பர்களிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த செயல்களிலும் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலை மறந்து மன நிம்மதியுடன் இருப்பீர்கள். எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் தொழில்துறையில் சக ஊழியர்களுடன் அனுசரணையாக இருப்பது மிகவும் முக்கியம். பேச்சில் சிறிது நிதானம் தேவை. பண வரவு அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் சிறந்து விளங்குவீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மன வலிமையுடன் இருப்பீர்கள். நண்பர்கள் ஆதரவு உங்களுக்கு மிகுந்த வலிமை தரும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். எந்த செயலை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இது மிகச் சிறப்பான நாளாக அமையும். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும். பிள்ளைகளால் ஒற்றுமை நிலவும். நீங்கள் எடுக்கும் எந்த ஒரு புதிய முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். சக ஊழியர்களுடன் நிதானமாக இருப்பது நல்லது. பேச்சில் சிறிது கவனம் தேவை.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானமாக இருக்க வேண்டிய நாளாக அமைகின்றது. வீண் விவகாரங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. எந்த ஒரு செயல் செய்தாலும் பெரியோர்களை ஆலோசித்து செய்வது மிகவும் நல்லது. நீங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். எந்த செயல் செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக அமையும். நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்கள் இடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தாரிடம் ஒற்றுமையாக இருப்பது நல்லது குடும்பத்தில் அதிக நேரம் செலவு செய்வீர்கள். பிள்ளைகளால் ஒற்றுமை நிலவும். தொழில்துறையில் நீங்கள் அதிக லாபமீட்டும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு முதலிடம் கொடுப்பார்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெய்வ வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். உங்களுக்கு பணம் இன்று அதிகரிக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். வீண் யோசனைகள் செய்வது உங்களுக்கு நல்லதல்ல. எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது மிகவும் நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடனும் நிதானமுடன் செயல்படுவது மிகவும் நல்லது. சந்தேகங்கள் கோபங்கள் பேராசைகள் போன்ற நெகட்டிவ் சிந்தனைகள் ஒழிக்க வேண்டும். சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். காதல் விவகாரங்கள் முடிவுக்கு வரும். ஒரு சில சமயத்தில் குழந்தைகள் போலவே நடந்து கொள்வீர்கள். இதனால் குழந்தைகள் நாள் முழுவதும் உங்களுடன் இருப்பார்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையப் போகின்றது. நீங்கள் சிறிது மனக் குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை காரணமாக வேலையை விட்டு விடலாமா என்று கூட எண்ணம் தோன்றலாம் ஆனால் வேலையை விட்டுவிட வேண்டாம். உங்களுடைய அன்பும் ஆதரவும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.