இன்றைய ராசி பலன் – 10-1-2021

rasi palan - 10-1-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவான சிந்தனை பிறக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு குருவாக இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொறுமையுடன் இருப்பது மன அமைதியைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் சில மாற்றங்களை சந்திக்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த வளர்ச்சியை காணும் இனிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தலையீடு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். திருமண ரீதியான முயற்சிகள் முன்னேற்றம் தரும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சற்று கடினமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு ரீதியான சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு எடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல சவால்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் தெம்பும், தைரியமும் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் மேலோங்கும் வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இனம் புரியாத உற்சாகம் பிறக்கும், இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஓரளவுக்கு நல்ல பலன்கள் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். வெளியிடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமநிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரியவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்வது மிகவும் நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய லட்சியம் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சியில் பலமுறை ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராட வேண்டியிருக்கும். மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கள் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -