இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2022

today rasipalan nov 10 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர் பார்த்தவை பூர்த்தி அடையக்கூடிய இனிமையான அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் போக்குவரத்துகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூல பலன் கிட்டும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமையில் விரிசல் விழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிதறாது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை கொடுக்கும் நாளாக இருக்கப் போகிறது. எதையும் எடுத்த கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் பன்மடங்கு உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நிழுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூல் ஆகும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் குறைந்து காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் வலுவாகும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே தேவையற்ற நபர்கள் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் தனி திறமையை நிரூபித்து காட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற சண்டை, சச்சரவுகள் வரக்கூடும் கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியிலிருந்த வேலைகள் முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் சில தொந்தரவுகள் வரலாம் பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுபவ பாடம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பக்தி உணர்வு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆக்கத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கோபதாபங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. கவலைகள் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுகவீனம் ஏற்படலாம் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மன அமைதி கிட்டும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பே உயர்வு என்கிற அமைப்பாக இருக்கிறது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அடுத்தவர்களின் விஷயங்களில் அனாவசிய மூக்கை நுழைக்காதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். பகைவர்களின் தொல்லை குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது நட்பு வட்டாரம் விரிவடையும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் உண்டாகக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய கை எதிலும் ஓங்கி இருக்குமாறு அமைப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறு சிறு பாதிப்புகள் மறையும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தெளிவான முடிவு எடுக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய பொறுமை உங்களுக்கு பலமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு உயர்வை கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -