இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2023

Rasi-palan-new10
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிடாதீங்க. அதேபோல வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியிருந்தால், அதை உடனடியாக கொடுத்து விடுங்கள். இல்லை என்றால் கடன் காரர்கள் வந்து சண்டை போட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் செய்ய முடியாத காரியங்களை இன்று தொடங்கலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்று கையில் எடுக்கலாம். வீட்டில் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் இருக்கும். சுப செலவு ஏற்படும். தீபாவளியை கோலாகலமாக கொண்டாட எல்லாம் தயாராகும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் ரொம்ப ரொம்ப ஈஸியா எடுத்துப்பீங்க. எல்லாம் இறைவன் கொடுத்த வரம். நல்லதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கேட்டதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சகஜமாக இன்றைய நாளை கடந்து செல்வீர்கள். அனுபவமே சிறந்த ஆசிரியர் என்ற பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். தீபாவளிக்கு சில பேருக்கு போனஸ் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளை குடும்பத்தோடு சந்தோஷமாக நடத்திச் செல்வீர்கள். தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். குறைந்த விலையில் நிறைய பட்டாசுகளையும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இளைய தலைமுறைக்கு சில நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. பண்டிகை நாள் நெருங்குகிறது அல்லவா. சுப செலவுகள் இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை மனமகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பண்டிகையை கொண்டாட எல்லா பர்சேஸும் முடிந்திருக்கும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் வரக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதையெல்லாம் கொஞ்சம் சமாளித்து விட்டால், பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து விடலாம்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை துணை எதிர்பாராத பரிசை கொடுக்க குடும்பத்தில் மிகப்பெரிய சந்தோஷம் உண்டாகும். சுப செலவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வராது என்று நினைத்த போனஸ் வந்து சேரும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளை கொடுத்ததற்கு குல தெய்வத்திற்கு நன்றி செலுத்துவோம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் குறைந்தது போல தோன்றும். ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல நிம்மதியாக தூங்குவீர்கள். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாள் இது. விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கட்டுமான தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் விற்பனை செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் முதல் பெரிய பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர், பெரிய கடை வைத்திருப்பவர்கள் வரை வியாபாரிகளிடம் உஷாராக இருக்கணும். கொள்முதல் செய்வதில் ஏதாவது தில்லு முல்லு நடக்க வாய்ப்புகள் உள்ளது. பெரிய அளவில் யாராவது உங்களை ஏமாற்றலாம் ஜாக்கிரதை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி இருக்கும். சர்ப்ரைஸ் என்று சொல்லுவார்கள் அல்லவா. அப்படி யாராவது உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவார்கள். சந்தோஷமாக இருப்பீங்க. குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பீர்கள். பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு தேவையான வேலைகளை செய்ய தொடங்கி விடுவீர்கள். இனிப்பு பலகாரம் பட்டாசு எல்லாம் வீட்டில் குவியும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செய்யக்கூடிய வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். மேல் அதிகாரிகளை சமாளிக்க முடியாது. அதோடு சேர்த்து மனைவியை சமாளிப்பதில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வாக்குவாதம் செய்யாதீங்க. விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனை இல்லை. முன்கோபத்தை குறைக்கணும். செலவை குறைக்கணும். கடன் வாங்கவே கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையை முடிப்பதில் சின்ன சின்ன கஷ்டங்கள் இருக்கும். டார்கெட்டை முடிக்கவில்லை என்ற பிரஷர் இருக்கும். ஆர்டர் எடுக்கவில்லை என்ற பிரஷர் இருக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன பின்னடைவுகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். பொறுமை காக்கவும்.

- Advertisement -