இன்றைய ராசிபலன் – 10 டிசம்பர் 2023

Rasi-palan10
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். இந்த விடுமுறை நாளை உபயோகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டை சுத்தம் செய்வது, வண்டி வாகனம் பழுது பார்ப்பது போன்ற வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்ப ஒற்றுமையோடு சந்தோஷம் இரட்டிப்பாகும். என்ஜாய் பண்ணுங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான ஓய்வு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் இருந்த அலைச்சலை சரி செய்ய, இன்றைய நாள் நல்ல சாப்பிட்டு நல்ல தூங்கி ரெஸ்ட் எடுப்பீங்க. மனநிறைவான இந்த நாளில் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டு பெரியவர்களுடன் நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். குழந்தைகளோடு விளையாடுவீர்கள். சில பேருக்கு நீண்ட தூர பயணம் கொஞ்சம் சிக்கலை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொழுதுபோக்கான நாளாக செல்லும். வீட்டில் நண்பர்களின் வருகையோ, விருந்தாளிகளின் வருகையோ இருக்கும். அவர்களுக்கு பிடித்ததை சமைத்துக் கொடுத்து சாப்பிட்டு நேரத்தை செலவு செய்வீர்கள். மழையால் பாதிக்கப்பட்டு பிரச்சனையில் சிக்கி இருந்தவர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய நாளாக அமையும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி ஏற்படும். சில பேருக்கு அலுவலக வேலை இரட்டிப்பாக இருக்கும். விடுமுறை தினமாக இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய வேலைகள் அதிகமாக இருக்கும். இந்த வார விடுமுறையை சரியாக நகர்த்திச் செல்ல முடியாது. முன்கோபம் வரும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. பெரிய அளவில் பிரச்சனை இல்லை.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று சோம்பேறித்தனத்தோடு இருக்க மாட்டீங்க. நேரத்தோடு உங்களுடைய வேலையை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த நாளுக்கு தேவையான வேலையை இன்றே தொடங்கி விடுவீர்கள். இந்த வாரத் தொடக்க உங்களுக்கு அமோகமாகத்தான் இருக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை சில பேர் வாங்குவீங்க. சுப செலவு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். உங்களுடைய தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய ஐடியாக்களை கொடுப்பார்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் சண்டை ஒரு முடிவுக்கு வரும். மாமியார் மருமகள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். ஹெல்மெட் அணிந்து கொள்ளவும். ஹெட்போன் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டாதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மந்தமான நாளாக இருக்கும். எந்த வேலையிலும் மனசு ஈடுபடாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள். சில பேருக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மனசு ஈடுபடும். கோவிலுக்கு செல்வது பூஜை புனஸ்காரங்களில் கலந்து கொள்வது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. கொஞ்சம் இன்று நிதானமாக யோசிக்கவும். பெரியவர்கள் சொல் பேச்சு கேட்கவும். அடம் பிடிக்காதிங்க. வியாபாரத்தில் கொஞ்சம் பொறுமை தேவை. பெரிய முதலீட்டை செய்தால் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கவும். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுக்கக் கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனதிற்கு பிடித்த நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். சந்தோஷமாக குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். பிள்ளைகளோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். மனைவிக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தில் இருக்கும். வியாபாரம் இரட்டிப்பாக பெருகும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க நல்ல வாய்ப்புகள் நல்ல வருமானமும் கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்திகள் செவிகளில் எட்டும். மன மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேஙத்தை செலவழிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். மாமியார் வழி உறவுகளின் மூலம் நல்லது நடக்கும். மனநிறைவாக இருக்கும் அனாவசிய செலவு குறைத்துக் கொண்டால் இன்னும் நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பாக எல்லா வேலையும் நடக்கும். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். நீண்ட நாள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மனநிறைவோடு இன்றைய நாளை கடந்து செல்வீர்கள். இந்த நாள் இறுதியில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவை குறைக்கணும். சேமிப்பை உயர்த்தனும் என்ற தாரக மந்திரத்தை மனதில் வச்சுக்கோங்க.

- Advertisement -